SKIP TO MAIN CONTENT

ஒரு bitcoin-இன் சந்தை விலை இப்போது எவ்வளவு?

Bitcoin
Digital currency bitcoin-Geralt CC0 Creative Commons-Pixabay Source: Pixabay

4 min read

Published

By R.Sathiyanathan


Skip to article content

பணநோட்டுக்களை அல்லது உலோகத்தால் ஆன நாணயங்களைப் பரிவர்த்தனை செய்வது என்பது காலங்காலமாக நிகழ்ந்துவரும் ஒன்று.

இன்றைய நிலையில், பணநோட்டுக்களை கையால் தொட்டுணராமல், இன்னொருவருக்கு அல்லது இன்னொரு நிறுவனத்திற்கு வங்கி மூலமாக பரிவர்த்தனை செய்யமுடிகிறது. நமது மாதாந்த வேதனத்தை நாம் பணிசெய்யும் நிறுவனம் வங்கிக்கணக்கிற்கு மாற்றி விடுகிறது. நாம் அதைக்கண்ணால் பார்ப்பதுமில்லை, கையால்தொடுவதுமில்லை. நாம் வங்கியட்டை மூலமாக செய்யும் செலவுகள் காரணமாகப் பணம் கணக்கில் தீர்ந்து போய்விடுகிறது.

Banks
Source: AAP

ஆகவே இன்றைய நிலையில் பணம் என்பது ஒரு வங்கிப்பதிவு bank record மட்டுமே என்ற நிலை நிலவினாலும், இந்த வரவு செலவுகளை அரசும் central bank என்ற மத்திய வங்கியும் கண்காணித்து வருகின்றன.

யார் யாரிடமிருந்து பணம் நமக்கு வந்திருக்கிறது; யார் யாருக்கு நாம் பணம் கொடுத்திருக்கிறோம் என்ற விபரங்களை மறைக்க முடியாது. நாம் எந்த நாட்டில் இருக்கிறோமோ அந்த நாட்டின் அரசால் அந்த நாட்டில் பணப்புழக்கத்தை நிர்வகிக்கவும் மற்றும் பணத்தின் மதிப்பை கூட்டவும் குறைக்கவும் முடியும்.

அரசின் மற்றும் வங்கி போன்ற நிதி நிறுவனங்களின் தலையீடு இன்றி பணம் பரிவர்த்தனை செய்யமுடியாது. அதேநேரத்தில் அரசு மேலும் மேலும் பணநோட்டுக்களை அச்சிட்டு பணப்புழக்கத்தை அதிகரிக்கமுடியும். இப்படிச்செய்வதால் பணத்தின் மதிப்பு, பெறுமதி வீழ்ச்சியடைகிறது.

அரசுகளின் மற்றும் வங்கிகளின் தலையீட்டை விரும்பாத சுதந்திர மனிதர்கள் கண்டுபிடித்த நாணயம் தான் cryptocurrency என்றும் virtual currency என்றும் digital currency என்றும் அழைக்கப்படும் மெய்நிகர் நாணயமாகும். இதற்கு உருவமில்லை; எடையில்லை; நிறமில்லை. இவ்வகை நாணயங்கள் பல இருக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான் Bitcoin என்பது.

Stacked cryptocurrency coins (Bitcoin, Ethereum, Litecoin)
Stacked cryptocurrency coins (Bitcoin, Ethereum, Litecoin) Source: iStock

இதைத் தவிர, டெதர், போல்காடாட், லைட்காயின், எதீரியம் என்று பல cryptocurrency கள் இருக்கின்றன. Bitcoin என்பது பிரபலமான cryptocurrency ஆக இப்போது இருக்கிறது.

இவற்றைப் பயன்படுத்தி பொருட்களை வாங்கமுடியும்; சேவைகளைப்பெற முடியும். எல்லா வியாபார நிலையங்களும் இவற்றை ஏற்றுக்கொள்வதில்லை; அதே வேளையில் சில நாடுகள் இதற்கு தடை விதித்துமிருக்கின்றன.

இந்த bitcoins களை ஒருவர் வாங்குவது எப்படி?

ஒருவர் தனது சொந்தப் பணத்தைக்கொண்டு அதாவது பண நோட்டுக்கள் அல்லது வங்கிக்கணக்கில் உள்ள பணத்தைப்பயனபடுத்தி - real money ஐப் பயன்படுத்தி bitcoin-களை வாங்கமுடியும். அதே நேரத்தில் தான் விற்கும் பொருட்களுக்கு அல்லது தான் வழங்கும் சேவைகளுக்கு bitcoin-களைத் தருமாறு கேட்கலாம். இதைத்தவிரவும் கணிணி மூலமாக bitcoin-களை mining என்ற முறையில் சேகரிக்கமுடியும் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் கணிணி மூலமாக ஒரு Bitcoin ஐ சேகரிக்க பத்து வருடங்களுக்கு மேல் எடுக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

Image

ஒரு bitcoin இன் சந்தைவிலை இப்போது எவ்வளவு?

தற்போது ஒரு Bitcoin இன் விலை சுமார் 40000 அமெரிக்க டாலர்களாகும். கடந்த சில வருடங்களில் இதன் பெறுமதி மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது. 2009 இல் இது அறிமுகமானபோது, இதற்கு பெறுமதி ஏதும் இருக்கவில்லை. 2010இல் இதன் பெறுமதி 1 அமெரிக்க டாலர் மட்டுமே. கடந்த வருடம் 1 bitcoin இன் விலை 23000 அமெரிக்க டாலர்களாக இருந்தது. இந்த ஒரு வருடத்திற்குள் இதன் பெறுமதியில் 77 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதன் விலை இவ்வளவு அதிகரிக்க என்ன காரணம்?

Bitcoin ஐ இப்போது digital gold என்று அழைக்கிறார்கள். தங்கத்தை விட அரிதானதாக இது பார்க்கப்படுகிறது. ஏனென்றால் தங்கம் கிடைப்பது அரிது என்ற போதும் சுரங்கங்களில் இருந்து தங்கத்தை மேலும் பெற முடியும்.

ஆனால் bitcoin களுக்கு எண்ணிக்கையைப் பொறுத்த அளவில் ஒரு உச்ச வரம்பு உண்டு. இதன் உச்ச வரம்பு இப்போது இரண்டு கோடியே பத்துலட்சமாகும். இதற்கு மேல் ‘வழங்கல்’ அதாவது ‘supply’ இல்லாத தால் இதன் பெறுமதி மேலும் மேலும் அதிகரித்து வருகிறது.

நமது ஆஸ்திரேலிய டாலரைப் பொறுத்த அளவில் மத்தியவங்கி முடிவு செய்தால் மேலும் மேலும் டாலர் நோட்டுக்களை அச்சிட முடியும். ஆனால் bitcoins ஐப் பொறுத்த அளவில் அதன் உச்ச வரம்பை பொருளாதார, நிதிசார்ந்த மற்றும் அரசியல் நோக்கங்களுக்காக அதிகரிக்கவே முடியாது. இதை ஒருவர் digital wallets என்ற செயலிமூலமாக கணிணியிலோ அல்லது smart phone இலோ வைத்துக்கொள்ள முடியும். கொடுப்பது பெறுவது என்பன இந்த digital wallet மூலமாகவே நிகழும். Block chain என்ற இணைய பதிவேட்டில் அல்லது ‘லெட்ஜரில்’ இந்த பரிவர்த்தனை பதிவாகும்.

Blockchain , Distributed ledger technology , bitcoin concept. Electric circuit graphic and infographic of Block chain , network connect , security , binary coded icons.
Source: Getty Images

இதன் பெறுமதி அதிகரிக்கிறது என்பதைத்தவிர bitcoin இன் நன்மைகள் என்று எவற்றைச்சொல்லலாம்?

பணவீக்கத்திலிருந்து காக்கும் சொத்தாக தங்கம் இருக்கிறது. அதற்கு ஒருபடி மேலே இருப்பது bitcoinsகள் அல்லது cryptocurrency கள்.

வலிமை மிக்க நாணயங்கள் என்று பார்க்கப்பட்ட அமெரிக்க டாலர் ஐப்பானிய யென், euro, sterling pound போன்றவை மிக volatile ஆன அதாவது, இலேசில் பெறுமதி மாறுபாட்டுக்கு உள்ளாகும் நாணயங்களாக இருக்கின்றன. இவற்றைக்கூட digital currency களாக மாற்றினால் என்ன என்று சம்பந்தப்பட்ட நாடுகளே ஆலோசித்து வருகின்றன.

கள்ளநோட்டு அடிப்பது போன்ற பிரச்சனைகள் bitcoinsகளைப் பொறுத்த அளவில் இல்லை.

அரசோ அல்லது வங்கிகளோ தலைஈடு இல்லாதபடியால் கொடுக்கல் வாங்கல்களை ரகசியமாக வைத்திருக்கமுடியும்.

என்பன போன்ற பல விடயங்கள் இதன் நன்மைகளாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன.

An advertisement for Bitcon near the train station in Tokyo.
An advertisement for Bitcon near the train station in Tokyo. Source: AAP

இவற்றின் தீமைகள் என்று எவற்றைச் சொல்லலாம்?

மத்திய வங்கி கரன்ஸி நோட்டுக்களை அச்சிடும் போது, அது மத்தியவங்கியின் தங்க கையிருப்பு, வெளிநாட்டு கரன்ஸி கையிருப்பு மற்றும் assets என்ற சொத்துக்கள் ஆகியவற்றின் மதிப்பைப்பொறுத்தே இருக்கும். ஆனால் bitcoins போன்ற cryptocurrency களுக்கு இப்படியான ‘tangible’ - தெளிவாகத் தெரியக்கூடிய சொத்துக்கள் இல்லை. Bitcoins போன்ற cryptocurrency கள், ‘பூஜ்யத்திற்குள்ளே கட்டியெழுப்ப ப்பட்ட ராஜ்யங்களாகவே’ இருக்கின்றன. ஒருநாள் இந்த ராஜ்யங்கள் பெறுமதியற்ற பூஜ்யங்களாக மாறிப்போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Bitcoin இன் பெறுமதி குறையாது என்று திட்டவட்டமாகச் சொல்லமுடியாது. இதற்கு முன்னர் பலதடவைகள் இவற்றின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுருக்கிறது.

சந்தைப்பங்குகளின் அல்லது bond களின் மதிப்பு குறித்து ஆராய்ந்து முதலீடு செய்ய வழிகள் உண்டு. ஆனால் bitcoinஇன் மதிப்பு ஏறுவதும் இறங்குவதும் ஏன் என்பது பல பெரிய நிறுவனங்களுக்குக் கூட புரியாத மர்மமாக இருக்கிறது.

The cryptocurrency market being displayed on a mobile phone
Eight out of 10 people trading Bitcoin and other cryptocurrencies in Australia are men. (AAP) Source: AAP

எந்த அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழும் இந்த cryptocurrency கள் வருவதில்லை என்பதால், மாஃபியாக்கள், போதைமருந்து வியாபாரிகள், ஆள் கடத்தல் அடியாட்கள் போன்றவர்களின் பாதாள உலக நடவடிக்கைகளுக்கு இது உதவக்கூடும்.

பரிவர்த்தனை ‘யாரால் யாருக்கு’ என்ற ‘முகமற்றவை’ என்பதால் இதை யார் வாங்குகிறர்கள் என்பது யாருக்கும் தெரியாது.

இது பெரும்பாலும் பதுக்கிவைக்கும் நடவடிக்கைகளுக்கே பயன்படக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.

இது பாதுகாப்பானது, யாராலும் திருட முடியாது என்ற விதமாக வர்ணிக்கப்பட்டாலும், 2014 இல் ஒரு உலகளாவிய நிறுவனமே தன் cryptocurrency முதலீட்டை சைபர் திருடர்களிடம் பறிகொடுத்து திவாலாகிப் போனது.

Cryptocurrency அல்லது bitcoin இன் எதிர்காலம் எப்படி இருக்கும்?

IMF என்ற சர்வதேச நாணய நிதியம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் bitcoins போன்ற cryptocurrency கள் தான் எதிர்கால நிதிப்பரிவர்த்தனைகளில் முன்னோடியாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறது. Chris wood போன்ற பிரபல முதலீட்டாளர்கள்கூட, ‘உங்களிடம் bitcoins இல்லாவிட்டால், இப்போதே வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.

Australian Housing Market
Source: Getty Images

அதே நேரத்தில், முன்பு சொன்னது போல பல நாடுகள் cryptocurrency இக்கு தடைவிதித்திருக்கின்றன. இதில் முதலீடு செய்வதில் ஆபத்து risk அதிகம் என்பதே பரவலான அபிப்பிராயமாக இருக்கிறது.

இன்னும் சில ஆண்டுகளில், இவற்றின் செயல்பாடு மேன்மையடையும் என்றும் அப்போது முதலீடு செய்வது பற்றி யோசிக்கலாம் என்பதே பல நிதித்துறை நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now