மறைந்த முன்னாள் பிரதமர் Bob Hawke அவர்களை கௌரவிக்கும் வகையில் பெர்த்தில் அமைக்கப்படவுள்ள புதிய பாடசாலைக்கு Bob Hawke College என்று பெயரிடப்படவுள்ளதாக மேற்கு ஆஸ்திரேலிய Premier Mark McGowan அறிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமரும் லேபர் கட்சியின் நீண்ட கால பிரதமருமான Bob Hawke கடந்த மே 16 ஆம் திகதி தனது 89 வயதில் உயிரிழந்தார்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய பொருளதார - சமூக மாற்றங்களுக்கு காரணமாகவிருந்த Bob Hawke அவர்களின் உழைப்பையும் பணிகளையும் கௌரவிக்கும் விதமாக பெர்த் பாடசாலைக்கு அவரது பெயரிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலையின் ஏழாம் ஆண்டு வரையிலான வகுப்புக்கள் அடுத்த வருடம் திறந்துவைக்கப்படவுள்ளதாகவும் சுமார் 250 மாணவர்கள் இந்த வகுப்புக்களுக்கு உள்ளீர்க்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக சுமார் 70 பில்லியன் செலவில் அமைக்கப்படுகின்ற முழுமையான பாடசாலை எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு பூர்த்தியாகும் என்றும் விரிவுபடுத்தப்படவுள்ள பாடசாலையில் ஆண்டு 7 முதல் 12 வரையான வகுப்பறைகளும் நிர்மாணிக்கப்பட்டு அவற்றுக்கு மாணவர்கள் உள்ளீர்க்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
