SKIP TO MAIN CONTENT

குடிநீர் மாசு அச்சம்: விக்டோரியாவில் குழாய்நீரை வழமைபோல பயன்படுத்தலாம் என அறிவிப்பு!

Water
Source: Pixabay

2 min read

Published

Updated


Skip to article content

விக்டோரியாவின் சுமார் 101 Suburb-களில் வாழ்பவர்களுக்கான Boil Water Advisory- நீரை கொதிக்கவைத்தபின்  பயன்படுத்துமாறு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல் மீளப்பெறப்படுவதாகவும், குடிநீர் மாசு குறித்த அச்சம் தற்போது நீங்கியுள்ளதாகவும் Yarra Valley Water தெரிவித்துள்ளது.

விக்டோரியாவில் வீசிய கடும் புயலால் ஏற்பட்ட மின்சேதம் காரணமாக Yarra Valley Water -இன் குடிநீர் சுத்திகரிப்பு பொறிமுறை சரியாக நடைபெறாமல், அசுத்த நீர் குடிநீருடன் கலந்திருக்கும் ஆபத்து உள்ளதால் சுமார் 101 Suburb-களில் வாழ்பவர்கள்  குடிக்க, சமைக்க, பல்துலக்க மற்றும் குழந்தைகளை குளிப்பாட்டுதல் போன்ற தேவைகளுக்கான நீரை கொதித்து ஆறவைத்து பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து 26 பகுதிகளில் குடிநீர் மாசு அச்சம் நீங்கிவிட்டதாக நேற்றையதினம் அறிவிக்கப்பட்டிருந்த பின்னணியில், ஏனைய பகுதிகளிலும் இந்த அச்சம் நீங்கிவிட்டதாகவும் அனைவரும் வழமைபோல நீரைப் பயன்படுத்த முடியும் எனவும் Yarra Valley Water இன்று பிற்பகல் அறிவித்துள்ளது.

Yarra Valley Water-இன் அறிவுறுத்தலையடுத்து கடந்த இரு நாட்களாக சுமார் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளிலுள்ளவர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டிருந்த அதேநேரம், பொதுமக்கள் பலரும் toilet paper-ஐப் போலவே குடிநீர் போத்தல்களை முண்டியடித்துக் கொண்டு கொள்வனவு செய்துவந்தமை குறிப்பிடத்தக்கது.

குடிநீர் மாசு எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ள பகுதிகளின் விபரம் வருமாறு:

  • ATTWOOD
  • BAYSWATER
  • BAYSWATER NORTH
  • BLACKBURN
  • BLACKBURN NORTH
  • BLACKBURN SOUTH
  • BORONIA
  • BOX HILL NORTH
  • BROADMEADOWS
  • BULLEEN
  • BUNDOORA
  • BURWOOD
  • BURWOOD EAST
  • CAMPBELLFIELD
  • CHIRNSIDE PARK
  • COBURG NORTH
  • COLDSTREAM
  • COOLAROO
  • CRAIGIEBURN
  • CROYDON
  • CROYDON HILLS
  • CROYDON NORTH
  • CROYDON SOUTH
  • DALLAS
  • DONCASTER
  • DONCASTER EAST
  • DONVALE
  • DOREEN
  • ELTHAM
  • EPPING
  • FAWKNER
  • FOREST HILL
  • GLEN WAVERLEY
  • GREENSBOROUGH
  • GREENVALE
  • HEATHMONT
  • KALORAMA
  • KANGAROO GROUND
  • KILSYTH
  • KILSYTH SOUTH
  • KINGSBURY
  • LALOR
  • LILYDALE
  • LOWER PLENTY
  • MEADOW HEIGHTS
  • MELBOURNE AIRPORT
  • MERNDA
  • MILL PARK
  • MITCHAM
  • MONBULK
  • MONT ALBERT NORTH
  • MONTMORENCY
  • MONTROSE
  • MOOROOLBARK
  • MOUNT DANDENONG
  • MOUNT EVELYN
  • MOUNT WAVERLEY
  • NORTH WARRANDYTE
  • NUNAWADING
  • OLINDA
  • PARK ORCHARDS
  • PLENTY
  • RESEARCH
  • RESERVOIR
  • RINGWOOD
  • RINGWOOD EAST
  • RINGWOOD NORTH
  • ROXBURGH PARK
  • SILVAN
  • SOMERTON
  • SOUTH MORANG
  • TEMPLESTOWE
  • TEMPLESTOWE LOWER
  • THE BASIN
  • THOMASTOWN
  • VERMONT
  • VERMONT SOUTH
  • VIEWBANK
  • WANTIRNA
  • WARRANDYTE
  • WARRANDYTE SOUTH
  • WARRANWOOD
  • WESTMEADOWS
  • WOLLERT
  • WONGA PARK
  • YALLAMBIE
  • YARRAMBAT

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now