நாடு முழுவதும் நாளை நடைபெறவுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த Boxing day விற்பனை இம்முறை ஆஸ்திரேலியாவில் புதிய சாதனை படைக்கும் என்று National Retail Association (NRA) தெரிவித்துள்ளது.
இந்த வருடம் நாடு முழுவதும் 260 கோடி டொலர்களுக்கு Boxing day விற்பனை நடைபெறும் என்று எதிர்பார்ப்பதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் மாநில Boxing day விற்பனை 87 கோடி டொலர்களை தாண்டும் என்றும் விக்டோரியா 82 கோடி டொலர்களை தாண்டும் என்றும் குயின்ஸ்லாந்து 44 கோடி டொலர் விற்பனையை தாண்டும் என்றும் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விற்பனை நிலையங்களுக்கு நேரடியாக சென்று கொள்முதல் செய்பவர்களைவிட, இணைய வழி Boxing day விற்பனையும் கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போதும் 23 சதவீதத்தினால் அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த வருடம் Boxing day இணைய வழி விற்பனை 65 கோடி 50 லட்சம் டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, Boxing day விற்பனை போல இம்முறை நத்தார் விற்பனையில் வாடிக்கையாளர்கள் பெருமளவில் ஆர்வம் காட்டவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
