சமூக மட்டங்களில் இயங்கும் விளையாட்டு கழங்கங்களுக்கு பத்து கோடி டொலர் மானியம் வழங்குவது தொடர்பில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் Bridget McKenzie விடுத்த அறிவிப்பு அரசமைப்புக்கு முரணானது என்ற சர்ச்சை எழுந்துள்ளதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனையை பிரதமர் ஸ்கொட் மொறிஸன் கோரியுள்ளார்.
நாடளாவிய ரீதியில் மானியங்களை பெற்றுக்கொள்வதற்கு அரசு முன்வைத்த நிபந்தனைகளைப் பூர்த்திசெய்த 684 திட்டங்களுக்கு 10 கோடி டொலர் பகிர்ந்தளிக்கப்பட்டதாக மொறிஸன் அரசு அறிவித்திருந்தது. ஆனால், இந்த திட்டத்தின் கீழ் சுமார் 1400 திட்டங்களுக்கு மானியம் வழங்கப்படவில்லை என்று பல்வேறு சமூக மட்ட விளையாட்டு கழகங்கள் தெரிவித்துள்ளன.
இவ்வாறு புறக்கணிக்கப்பட்டதாகக்கூறப்படும் விளையாட்டு கழகங்களின் சார்பில், சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலேலாசிக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
