SKIP TO MAIN CONTENT

2032 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரிஸ்பெனில் நடைபெறும் வாய்ப்பு அதிகரிப்பு!

The Olympic Rings logo is pictured in front of the headquarters of the International Olympic Committee (IOC) in Lausanne, Switzerland, on March 18, 2020.
The Olympic Rings logo is pictured in front of the headquarters of the International Olympic Committee (IOC) in Lausanne, Switzerland, on March 18, 2020. Source: AFP via Getty Images

1 min read

Published


Skip to article content

2032 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பிரிஸ்பென் நகரில் நடைபெறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

இப்போட்டிகளை நடத்துவதற்கு விருப்பம் தெரிவித்த நகரங்களின் பட்டியலில் சர்வதேச ஒலிம்பிக் கழகத்தின் விருப்பத்தெரிவாக பிரிஸ்பென் காணப்படுவதாகவும் இம்முடிவு நேற்றையதினம் இடம்பெற்ற கழக கூட்டத்தில் எட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து சர்வதேச ஒலிம்பிக் கழகம் ஆஸ்திரேலியத் தரப்பினருடன் மேலதிக பேச்சுக்களை நடத்தி இறுதிமுடிவினை எட்டவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

2032 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்த இந்திய தலைநகர் புதுடெல்லி, கத்தார் நாட்டின் தலைநகர் Doha, ஹங்கேரி நாட்டின் தலைநகர் Budapest, துருக்கி நாட்டின் Istanbul, இந்தோனேசிய நாட்டின் தலைநகர் Jakarta ஆகிய நகரங்கள் போட்டியில் இருந்தன.

கூடவே  பிரிஸ்பென் மற்றும் சீன நகரங்கள் Chengdu மற்றும் Chongqing நகரங்களும் போட்டியிட்டன.

ஆனால் இந்த நகரங்கள் அனைத்தும் இந்த 2032 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்த தற்போது அதீத ஆர்வம் காட்டவில்லை என்று செய்திகள் எழுந்துள்ளன. எனவே 2032 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்த பிரிஸ்பென் நகரம் போட்டியின்றி தெரிவு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி 2032 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்த பிரிஸ்பென் நகரம் தெரிவு செய்யப்பட்டால் உடனடியாக பணிகள் ஆரம்பமாகும் என்று  குயின்ஸ்லாந்து மாநில Premier Annastacia Palaszczuk கூறினார்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now