உலகிலேயே broadband இணையவேகம் அதிகமான நாடுகளின் பட்டியலில், இந்தியா, கசகஸ்தான், வியட்நாம் போன்ற நாடுகளைவிடவும் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலியா காணப்படுகிறது.
இணைய வேகத்தை ஆராயும் நிறுவனமான Speedtest, 177 நாடுகளில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் வெளியிட்டுள்ள புதிய தரவரிசைப் பட்டியலின்படி அதிவிரைவான fixed broadband இணைய வேகத்தைக் கொண்டுள்ள நாடாக சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
சிங்கப்பூரில், broadband கட்டமைப்பின் சராசரி வேகம் 200.1 mbps.
சிங்கப்பூருக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் ஹொங்காங்(164.8 mbps) மூன்றாவது இடத்தில் மொனாக்கோ (148.9 mbps) உள்ளன.
அடுத்தடுத்த இடங்களில் ரொமானியா(144.9 mbps), தென்கொரியா (144.4 mbps) ஆகிய நாடுகள் உள்ளன.
இந்தப்பட்டியலில் இந்தியா (42.1 mbps) 67-வது இடத்திலும், கசகஸ்தான் (42.5 mbps)
65-வது இடத்திலும் இருக்கிறது.
நியூசிலாந்து (103.3 mbps) 24-வது இடத்தைப் பிடித்துள்ளது.
ஆஸ்திரேலியா (41.7 mbps) 68-வது இடத்தைப் பெற்றுள்ளது. உலகின் சராசரி இணைய வேகம் 73.5 mbps என்பது குறிப்பிடத்தக்கது.



