SKIP TO MAIN CONTENT

நிதிநிலை அறிக்கை 2018: புதிதாக குடியேறியவர்கள் மற்றும் அகதிகளை எவ்வாறு பாதிக்கிறது?

aap
Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka.T



Skip to article content

இன்று வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கையினால் பாதிக்கப்படும் தொகுதியினராக நாட்டில் புதிதாக குடியேறியவர்களும் அகதிகளும் காணப்படுகின்றனர்.

இதன்படி ஆஸ்திரேலியாவில் புதிதாக குடியேறியவர்கள் newstart உள்ளிட்ட அரச கொடுப்பனவுகளைப் பெறுவதற்கு 4 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.

இதன்மூலம் எதிர்பார்க்கப்பட்ட 1.3 பில்லியன் டொலர்கள் சேமிப்புக்கு மேலதிகமாக 200 மில்லியன் டொலர்களை சேமிக்க முடியும் என அரசு தெரிவித்துள்ளது.

தற்போது 2 வருடங்கள் நாட்டில் வாழ்ந்திருந்தால் அரசகொடுப்பனவுகளுக்குத் தகுதிபெறுவர் என இருக்கும் சட்டத்தை மாற்றி 3 ஆண்டுகளாக மாற்றுவதற்கான சட்ட முன்வடிவு, நாடாளுமன்ற ஒப்புதலுக்காக காத்திருக்கும் பின்னணியில் இதனை 4 ஆண்டுகளாக  அதிகரிக்க அரசு முடிவுசெய்துள்ளது.

இதேவேளை ஆஸ்திரேலியாவில் அகதிகளாக குடியேறியவர்கள் வேலைதேடுவதற்கு உதவும் சென்டர்லிங்கின் Jobactive சேவையைப் பெறுவதற்கு 6 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். இதுவரை 3 மாதங்கள் வரை மட்டுமே காத்திருக்க வேண்டியிருந்தது.

இவ்வாறு காத்திருக்கும் காலப்பகுதியில் அவர்கள் தமது ஆங்கிலப்புலமையை வளர்த்துக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now