SKIP TO MAIN CONTENT

2019 நிதிநிலை அறிக்கை: சமூகங்களிடையே ஒத்துழைப்பு

ஆஸ்திரேலியாவில் குடியேறியவர்களின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் செய்யும் பங்களிப்பை அதிகரிக்கவும், அவற்றின் தடைகளைக் குறைப்பதற்கும் புதிய திட்டங்களை அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம், பலமான சமுதாயத்தை உருவாக்க அரசு முயற்சிக்கிறது.

Social-cohesion report
File photo Source: AAP

1 min read

Published

By Kulasegaram Sanchayan



Skip to article content

சமூக மொழி பாடசாலைகளுக்கும்,  குடியேற்ற சேவைகள் வழங்கும் சமூக குழுக்களுக்கும் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு 27.2 மில்லியன் டொலர்களை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

உதாரணமாக, மெல்பேர்ண் நகரில் உள்ள கிரேக்க மையத்திற்கும்,  மெல்பேர்ண் பல்கலைக்கழகத்தில் கிரேக்க மொழி இருக்கை அமைக்கவும் 5 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இணைய வழி பாவனையை அதிகரிக்கவும், தீவிரவாதத்தை எதிர்த்து செயற்படவும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு 1.8 மில்லியன் டொலர்கள் மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

சமூகங்களிடையே ஒத்துழைப்பை வளர்க்கும் முயற்சிகளுக்கு, தற்போது 600,000 டொலர்கள் தான் செலவழிக்கப்படுவதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

 

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now