SKIP TO MAIN CONTENT

2019 நிதிநிலை அறிக்கை: வரி குறைப்பு

தனியார் மற்றும் வணிக வரிகள் குறைக்கப்படுகின்றன.

Personal and business tax cuts
Personal and business tax cuts Source: Creative Commons

1 min read

Published

Updated

By Kulasegaram Sanchayan



Skip to article content

இந்த வருட நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயம், 158 பில்லியன் டொலர் வருமான வரி குறைப்பு என்று சொல்லலாம்.

இது இரண்டு படிகளில் அறிமுகமாகிறது.  இதன் முதல் பகுதி உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.  கடந்த வருட நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வரிகுறைப்பின் இரட்டிப்பு மடங்காகும்.

ஆண்டொன்றில் 90,000 டொலர் வரை சம்பாதிப்பவர்கள் இந்த வருடம் வரி தாக்கல் செய்யும் போது, 1,080 டொலர் வரையில் அவர்கள் கட்டிய வரிப்பணத்தை மீளப் பெறக்கூடியதாக இருக்கும்.

2024 ம் ஆண்டுக்குள், வரி கட்டும் படி முறைகளில் மாற்றம் அறிமுகமாகி, 32.5 சதவீத வரி கட்டும் படிக்குள் இருப்பவர்கள் செலுத்த வேண்டிய வரி, 30 சதவீதமாக குறைக்கப்படும்.

“45,000 டொலர் முதல் 200,000 டொலர் வரை சம்பாதிக்குப்பவர்கள், அதாவது வரி செலுத்துவோரில் 94  சதவீதமானோர் 30 சதவீத வரி மட்டுமே செலுத்த வேண்டும்,” என்று Josh Frydenberg கூறினார்.

இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வர, நாடாளுமன்றத்தில் சட்டமாக்கப்பட வேண்டும்.  அடுத்த தேர்தலின் பின்னர் தான் அது சாத்தியமாகும் என்று, நிதி அமைச்சர் Mathias Cormann கூறினார்.

அடுத்த 4 ஆண்டுகளில், வேலையில்லாதோர் எண்ணிக்கை 5 சதவீதமாக இருக்கும் என அரசு கணித்துள்ளது. 2018-19-ல் 2.5 சதவீதமாக இருக்கும் ஊதிய வளர்ச்சி, 2022- 23ல் 3.5 சதவீதமாக உயரும் எனவும் அரசு கணித்துள்ளது.

உங்களது வரி எவ்வளவு குறையும் என்பதைக் கணிக்க, இந்த இணைப்பிற்கு செல்லவும்:

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now