SKIP TO MAIN CONTENT

2019 நிதிநிலை அறிக்கை: அகதிகளுக்கான மருத்துவ சேவை நிறுத்தப்படுகிறது

ஆஸ்திரேலியாவிற்கு வெளியே தடுப்பு முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் மருத்துவ சேவைகள் பெற, ஆஸ்திரேலியாவிற்கு கொண்டுவரும் Medevac என்று அழைக்கப்படும் சேவை நிறுத்தப்படுகிறது.

Asylum Xmas
A guard is seen at the entry door during a tour of the North West Point Detention Centre on Christmas Island. Source: AAP

1 min read

Published

By Kulasegaram Sanchayan



Skip to article content

இந்த ஆண்டு ஜூலை முதலாம் தேதி முதல் கிறிஸ்மஸ் தீவிலுள்ள தடுப்பு மையத்தை மூடுப்போவதாக அரசு அறிவித்தது.

Illegal Maritime Arrivals (சட்டவிரோதமாக கடல்வழியால் வந்தவர்கள்) என்று அரசு அழைக்கும் எந்தவொரு புகலிடக்கோரிக்கையாளரோ, அகதியோ,  நவூரு அல்லது பப்புவா நியூ கினியிற்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள்.

கிறிஸ்மஸ் தீவிலுள்ள தடுப்பு முகாம் மிகக் குறைந்த சேவை வழங்கும் செயற்பாட்டுடன் இயங்கும்.

இவ்வாறு செய்வதன் மூலம், 2018-19ல் செலவிடப்பட்ட 150.4 மில்லியன் டொலர்கள் 2019-20 ல் 23.7 மில்லியனாகக் குறைக்கப்படும் என்று அரசு கூறுகிறது.

 

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now