அரசு அறிவித்துள்ள இந்த திட்டத்தின்படி, தற்போது ஒருவருக்கு ஒரு முதலாளி வேலை தந்தால் அந்த முதலாளிக்கு JobMaker Hiring Credit என்ற முறையில் நிதி உதவி வழங்க அரசு முன்வந்துள்ளது.
Centrelink வழங்கும் Job Seeker எனும் அடிப்படையில் அரசின் நிதி உதவி பெறும் 16 வயது முதல் 35 வயது கொண்ட ஒருவருக்கு ஒரு முதலாளி வேலை தந்தால் அரசு அந்த பணிக்கு அமர்த்தப்படும் நபரின் வார சம்பளத்தில் அதிக பட்சமாக $200 தர முன்வந்துள்ளது. குறிப்பாக Centrelink வழங்கும் Job Seeker எனும் அடிப்படையில் அரசின் நிதி உதவி பெறும் 16 வயது முதல் 29 வயதுள்ள ஒருவருக்கு ஒரு முதலாளி வேலை தந்தால் அரசு அந்த பணிக்கு அமர்த்தப்படும் நபரின் வார சம்பளத்தில் $200 தர முன்வந்துள்ளது. அதேவேளையில் 30 வயது முதல் 35 வயதுள்ள ஒருவருக்கு ஒரு முதலாளி வேலை தந்தால் அரசு அந்த பணிக்கு அமர்த்தப்படும் நபரின் வார சம்பளத்தில் $100 தர முன்வந்துள்ளது.
இன்னும் இதை எளிதாக விளக்குவதானால், Centrelink வழங்கும் Job Seeker எனும் அடிப்படையில் அரசின் நிதி உதவி பெறும் 16 வயது முதல் 29 வயதுள்ள ஒருவருக்கு ஒரு முதலாளி வேலை தந்தால் அவரின் வார சம்பளம் $1000 என்றால் அரசு அந்த பணிக்கு அமர்த்தப்படும் நபரின் சம்பளத்தில் $200ஐ முதலாளிக்கு தரும். அப்படிஎன்றால் முதலாளி $800 தந்தால் போதுமானது.
அதுபோன்றே Centrelink வழங்கும் Job Seeker எனும் அடிப்படையில் அரசின் நிதி உதவி பெறும் 30 வயது முதல் 35 வயதுள்ள ஒருவருக்கு ஒரு முதலாளி வேலை தந்தால் அவரின் வார சம்பளம் $1000 என்றால் அரசு அந்த பணிக்கு அமர்த்தப்படும் நபரின் சம்பளத்தில் $100ஐ முதலாளிக்கு தரும். அப்படிஎன்றால் முதலாளி $900 தந்தால் போதுமானது.
அப்படி வேலைதரும் முதலாளி முழுநேர வேலைதான் தரவேண்டுமென்றில்லை. குறைந்த பட்சம் 20 மணிநேர பகுதி நேர வேலை தந்தாலும் போதுமானது. இந்த திட்டம் ஒரு ஆண்டு நடைமுறையில் இருக்கும் என்றும் இதன்மூலம் குறைந்தது 450,000 வேலைகள் உருவாகும் என்றும் அரசு மதிப்பிடுகிறது.
கொரோனா கொள்ளைநோய் தாக்கத்தினால் நாடு பொருளாதார தேக்கநிலை காரணமாக வேலை இழந்த பெண்கள் வேலை பெறும் வகையில் அரசு Boosting Female Founders எனும் திட்டத்திற்கு மேலும் அதிகமாக $35.9 million நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. புதிய தொழில் துவங்கும் பெண்களுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் இந்த திட்டம் இயங்குகிறது.
