SKIP TO MAIN CONTENT

குடியேறுவோர் எண்ணிக்கை குறைகிறது, அகதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது!

கொரோனா நோய் உலகெங்கும் முழு வீச்சில் பரவிகொண்டிருக்கும் பின்னணியில் ஆஸ்திரேலிய எல்லைகள் மூடப்பட்டு சர்வதேச விமான போக்குவரத்து பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு புதிதாக குடியேற வருகின்ற மக்களின் எண்ணிக்கை 2020-2021ம் ஆண்டில் எதிர்பார்க்கப்பட்டதைவிட சுமார் 72000 குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Protest against detention
Source: AAP

1 min read

Published

Updated

By Raysel


Skip to article content

ஆனாலும் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு நிலைமை சீரானதும் குடியேறுவோர் எண்ணிக்கை 2023-24 ஆண்டளவில் படிப்படியாக உயர்ந்து 201,000 என்ற அளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனாலும் புதிதாக நாட்டில் குடியேற அனுமதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட 160,000 என்ற அளவிலேயே தொடர்ந்தும் இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.

குடியேறிய மக்களுக்கு மகிழ்ச்சி தரும் அம்சமாக Family reunion stream-க்கான விசா இடங்கள் 47,732 இலிருந்து 77,300 ஆக அதிகரிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

ஆனால் ஆஸ்திரேலியா ஒவ்வொரு ஆண்டும் ஏற்றுக்கொள்ளும் அகதிகளின்  (மனிதாபிமான அடிப்படையில் உள்வங்கப்படுவோர்) எண்ணிக்கையை குறைப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் அனுமதிக்கப்படும் அகதிகளின் எண்ணிக்கையில் 5,000 இடங்களைக் குறைத்து இனி ஒரு ஆண்டு 13,750 அகதிகளை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்போவதாக அரசு அறிவித்துள்ளது.  

இப்படி அகதிகளின் எண்ணிகையில் 5,000ஐ  குறைப்பதன் மூலம் எதிர்வரும் நான்கு ஆண்டுகளில் $958 million சேமிக்க முடியும் என்று அரசு கருதுகிறது. புதிதாக வரும் அகதிகளை குடியமர்த்தும் பணிக்கு அதிக நிதி செலவாகிறது என்பதால் இப்படி அகதிகளின் எண்ணிகையை குறைப்பதாக அரசு தனது குறைப்பு முடிவை நியப்படுத்தியுள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now