SKIP TO MAIN CONTENT

ஒரு கோடிக்கும் மேலானவர்களுக்கு வரிச் சலுகை. யாரெல்லாம் பயன்பெறுவர்?

அரசு சற்றுமுன்னர் சமர்ப்பித்த நாட்டின் நிதி நிலை அறிக்கையில் வரி செலுத்துவோருக்கு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

Budget 2020-2021
Source: AAP

1 min read

Published

By Raysel


Skip to article content

ஒருவர் ஈட்டும் வருமானத்தில் தற்போது வசூலிக்கப்படும் வரி விகிதத்தில் மாற்றம் கொண்டுவரப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய வரி விகித மாற்றம் ஜூலை மாதம் முதல் தேதியிலிருந்து (அதாவது நடப்பு நிதியாண்டிலிருந்து) நடைமுறைக்கு வருவதாக அரசு அறிவித்துள்ளது.

இனிமேல் $37,000 முதல் $45,000 வரையுள்ள வருமானத்திற்கு 19 சத வரி வசூலிக்கப்படும். எனவே புதிய வரி விகிதப்படி, ஒருவர் $45,000 முதல் $90,000 வரை வருமானம் ஈட்டினால் அவர் $1,080 வரை குறைவான வரி செலுத்துவார். ஒருவர் $90,000 க்கும் அதிகமாக வருமானம் ஈட்டினால் அவர் $2,565 வரை குறைவான வரி செலுத்துவார்.  

அரசு அறிவித்திருக்கும் வரி குறைப்பின்படி குறைவான வருமானம் ஈட்டும் குடும்பங்கள் மற்றும் மத்தியதர குடும்பங்களில் வருமானம் ஈட்டும் தனி நபர் $2745 வரி சேமிப்பர் என்றும் வருமானம் ஈட்டும் தம்பதியினர் $5490 வரி சேமிப்பர் என்றும் கணக்கிடப்படுகிறது.      

சுருக்கம்:  

$37,001 முதல் $48,000 வரை வருமானம் ஈட்டுவோர் $510 முதல் $2160 வரை வரிச்சலுகை பெறுவர்.

$48,001 முதல் $90,000 வரை வருமானம் ஈட்டுவோர் $2160 முதல் $2295 வரை வரிச்சலுகை பெறுவர்.

$90,001 முதல் $126,000 வரை வருமானம் ஈட்டுவோர் $2295 முதல் $2745 வரை வரிச்சலுகை பெறுவர்.

புதிய வரி விகிதத்தின் மூலம் மக்கள் குறைவான வரி செலுத்துவர் என்றும் இதனால் சுமார் 11 மில்லியன் (ஒரு கோடியே பத்து லட்சம் மக்கள்) பலன் பெறுவார் என்று அரசு மதிப்பிடுகிறது.  இவர்களின் சுமார் எழுபது லட்சம் பேர் $2000 க்கும் அதிகமாக வரிச்சலுகை பெறுவர்.       

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now