SKIP TO MAIN CONTENT

நிதி நிலை அறிக்கை 2020: முதியோர் மற்றும் முதியோர் பராமரிப்புத் துறை

AAP
Source: AAP

1 min read

Published


Skip to article content

ஆஸ்திரேலியாவின் 2020-21ம் ஆண்டுக்குரிய நிதிநிலை அறிக்கையை கருவூலக்காப்பாளர் Josh Frydenberg இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இதன்கீழ் முதியோர் மற்றும் முதியோர் பராமரிப்புத் துறைக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கவுள்ளன என்ற விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

  • ஓய்வூதியம் பெறும் முதியவர்கள் தற்போது கிடைக்கும் கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக 250 டொலர்களை டிசம்பரிலும், மற்றுமொரு 250 டொலர்களை அடுத்த ஆண்டு மார்ச்சிலும் பெற்றுக்கொள்ளலாம்.
  • வயதுமுதிர்ந்த ஆஸ்திரேலியர்களுக்கான புதிய 23 ஆயிரம் home care packages-களுக்கென 1.6 பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • முதியோர் பராமரிப்புத் துறையில் பணிபுரிபவர்களுக்கான பயிற்சிகளுக்கென முதலீடு செய்யப்படவுள்ள அதேநேரம் மறதிநோயுடனான முதியவர்களைப் பராமரிப்பது குறித்த மேலதிக பயிற்சி மற்றும் உதவிகள் வழங்கப்படவுள்ளன.
  • கொரோனா பரவல் காலத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட முதியோர் பராமரிப்புத்துறைக்கென ஏற்கனவே 1.6 பில்லியன் டொலர் நிதியுதவி வழங்கப்பட்டுள்ள பின்னணியில் இத்துறை மீதான ரோயல் கமிஷன் விசாரணை அறிக்கை வெளிவந்தபின் அதன் பரிந்துரைகளுக்கேற்ப மேலதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now