ஆஸ்திரேலிய நிதிநிலை அறிக்கையை கருவூலக்காப்பாளார் Josh Frydenberg சற்று நேரத்திற்கு முன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுவதை ஊக்குவிக்க பல்கலைக்கழகங்களுக்கு ஒரு பில்லியன் டொலர்கள் ஒதுக்கப்படுகிறது என்றும், குறுகியகால பயிற்சிகளுக்கு (short courses) அரை பில்லியனுக்கும் அதிகமான தொகை வழங்கப்படுகிறது என்றும் அரசு அறிவித்தது.
பாடசாலைகளின் வளர்ச்சிக்கு, கூடுதலாக 150 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்படுகிறது.,
மேல் நிலைப் பாடசாலைகளில் கல்வி கற்கும் பின்தங்கியவர்களுக்கும், COVID-19 தொற்றை சமாளிக்க பாடசாலைகளுக்கும் ஆரம்பக் கல்வி கற்பவர்களின் அறிவியல் திறன்களை மேம்படுத்துவதற்கும் பூர்வீக குடியின் பின்னணி கொண்ட 12,500 பேரின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை மேம்படுத்தவும் இந்த கூடுதல் நிதி பயன்படுத்தப்படும்.
