SKIP TO MAIN CONTENT

நிதிநிலை அறிக்கை 2020: குடிவரவு மற்றும் மக்கள் தொகை

Australia's border closures will see net migration falling into negative levels.
Australia's border closures will see net migration falling into negative levels. Source: AAP

1 min read

Published

Updated


Skip to article content

ஆஸ்திரேலியாவின் 2020-21ம் ஆண்டுக்குரிய நிதிநிலை அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் குடிவரவு மற்றும் மக்கள் தொகை தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் வருமாறு:

  • ஆஸ்திரேலிய சனத்தொகை 2022ம் ஆண்டளவில் 26 மில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டு எதிர்வுகூறப்பட்ட எண்ணிக்கையைவிட 1 மில்லியன் குறைவாகும்.
  • ஆண்டுதோறும் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்வோரின் எண்ணிக்கை இரண்டாவது உலகப்போர் காலத்திற்குப் பின்னர் முதற்தடவையாக இம்முறை பாரியளவில் குறைவடைந்துள்ளது.
  • கொரோனா பரவல் காரணமாக சர்வதேச எல்லைகள் மூடப்பட்டுள்ளாதால் ஆஸ்திரேலியாவுக்கான புதிய குடிவரவாளர்களின் எண்ணிக்கை 2020-2021ம் ஆண்டில் எதிர்பார்க்கப்பட்டதைவிட 72 ஆயிரத்தால் குறைவடைந்துள்ளது.
  • 2023-24 ஆண்டளவில் இந்த எண்ணிக்கை படிப்படியாக 201,000 என்ற அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • ஆஸ்திரேலியாவுக்குள் ஆண்டுதோறும் உள்வாங்கப்படுவோரின் எண்ணிக்கை ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட 160,000 என்ற அளவிலேயே தொடர்ந்தும் பேணப்படவுள்ளது.
  • Global Talent Independent program-க்கான இடங்கள் 15 ஆயிரமாக அதிகரிக்கப்படும் அதேநேரம் Business Innovation and Investment Program-க்கான இடங்கள் 13,500 ஆக அதிகரிக்கப்படுகிறது.
  • Family reunion stream-க்கான இடங்கள் 47,732 இலிருந்து 77,300 ஆக அதிகரிக்கப்படுகிறது. இதில் 72,300 partner visa category, ஏனைய 5000 இடங்கள் பிள்ளைகளுக்கானவை.
  • Humanitarian visa program-மனிதாபிமான அடிப்படையில் உள்வங்கப்படுவோருக்கென 13,750 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • ஆஸ்திரேலியா நோக்கிவரும் படகுகளைத் தடுப்பதற்கான செயற்றிட்டங்களுக்கென மேலதிகமாக $41.4 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now