இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் 2020-21ம் ஆண்டுக்குரிய நிதிநிலை அறிக்கையின்படி பல முக்கியமான மருந்துகள் PBS - Pharmaceutical Benefits Scheme எனப்படும் மலிவு விலையில் மருந்துகளை வாங்கும் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
இதன்படி Ovarian cancer எனப்படும் சூல்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் Lynparza என்ற மருந்தினை concession card வைத்திருப்பவர்கள் $6.60 சதத்திற்கும் (per script) ஏனையவர்கள் 41 டொலர்களுக்கும்(per script) பெற்றுக்கொள்ள முடியும். இதன்மூலம் ஆண்டொன்றுக்கு 300 பெண்கள் நன்மையடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது. சாதாரணமாக சூல்பை புற்றுநோய் சிகிச்சையின்போது இந்த மருந்துக்கென சுமார் 140,500 டொலர்கள்(per course) செலவாகின்றமை குறிப்பிடத்தக்கது.
கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் Tecentriq, Avastin ஆகிய மருந்துகளை மானிய விலையில் பெற்றுக்கொள்ள முடியும். இதன்மூலம் ஆண்டொன்றுக்கு 500 பேர் நன்மையடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது. சாதாரணமாக கல்லீரல் புற்றுநோய் சிகிச்சையின்போது இந்த மருந்துக்கென சுமார் 170,000 டொலர்கள்(per course) செலவாகின்றமை குறிப்பிடத்தக்கது.
மற்றும் Eylea என்ற pathologic myopia-வுக்கான மருந்து, Calquence என்ற lymphocyctic lymphoma- வுக்கான மருந்து உள்ளிட்ட இன்னும் பல மருந்துகள் PBS திட்டத்தின்கீழ் சேர்க்கப்பட்டுள்ளன.
