குழந்தை பராமரிப்பு திட்டத்திற்கு ஆண்டொன்றுக்கு 566 மில்லியன் டாலர் அரசு செலவிடும். இது Childcare Subsidy Scheme என்று அழைக்கப்படும் குழந்தை பராமரிப்பு மானியத் திட்டத்திற்காக செலவிடப்படும். இந்த நிதி உதவி அடுத்த ஆண்டு (2022) ஜூலை மாதம் நடைமுறைக்கு வரும்.
189,390 டாலருக்கும் அதிகமான வருமானம் கொண்ட குடும்பத்திற்கான அதிக பட்ச மானியம் $ 10,560 என்றிருப்பது ரத்து செய்யப்படும்.
குழந்தை பராமரிப்பு திட்டத்தின் கீழ் குழந்தை பராமரிப்பு நிலையம் செல்லும் குடும்பத்தில் ஒரு குழந்தை இருந்தால், மானியம் 65 சதவீதமாக இருக்கும். ஆனால் ஒரு குடும்பத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இருந்தால், அந்த குடும்பத்திற்கு கிடைக்கும் மானியம் ஒவ்வொரு குழந்தைக்கும் 95 சதவீதமாக உயரும்.
இந்த புதிய மாற்றம் மூலம் சுமார் 250,000 குடும்பங்கள் பயனடைவர் என்று அரசு மதிப்பிடுகிறது.