SKIP TO MAIN CONTENT

புதிதாக நாட்டில் குடியேறுவோர் அரசு நிதி உதவிபெற நான்கு ஆண்டுகள் காத்திருக்கவேண்டும்

அடுத்த ஆண்டு (2022) ஜனவரி 1 முதல் நாட்டில் புதிய குடியேறுகின்ற அனைவரும் அரசு நிதி உதவிபெற நான்கு ஆண்டுகள் காத்திருக்கவேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.

Migrants
Source: AAP

1 min read

Published

By Raysel

Source: SBS


Skip to article content

அரசின் இந்த புதிய மாற்றம் மூலம் அரசு 671 மில்லியன் டாலர் சேமிக்க இயலும் என்று திட்டமிடுகிறது. இந்த புதிய விதிவரம்பு அனைத்து வதிவிடவிசா பெற்று வருவோருக்கும் பொருந்தும்.

கிறிஸ்மஸ் தீவில் உள்ள புகலிடம் கோருவோர் தடுப்பு மையத்தின் பயன்பாட்டை நீட்டிக்கவும் மற்றும் அங்கு நடக்கும் கலவரங்களைத் தடுக்கவும், அப்படியான கலவரங்கள் நடக்கும் வாய்ப்புகளைக் குறைக்கவும் அரசு நிதி ஒதுக்கப்போவதாக அறிவித்துள்ளது. இதற்காக அரசு தற்போதிய நிதி நிலை அறிக்கையில் 464.7 மில்லியன் டாலர் ஒதுக்கியுள்ளது.

 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now