SKIP TO MAIN CONTENT

நிதிநிலை அறிக்கை 2022: நீங்கள் கட்டாயம் அறிய வேண்டியவை

நாட்டின் நிதிநிலை அறிக்கையை (2022) நேற்று கருவூலக்காப்பாளர் Treasurer Josh Frydenberg நேற்று இரவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அந்த நிதி நிலை அறிக்கையிலுள்ள முக்கிய அம்சங்களை தொகுத்தளிக்கிறோம்.

Treasurer Josh Frydenberg speaks to journalists at a press conference before delivering his 2022 Budget speech at Parliament House in Canberra, Tuesday, March 29, 2022. (AAP Image/Mick Tsikas) NO ARCHIVING
Treasurer Josh Frydenberg speaks to journalists at a press conference before delivering his 2022 Budget. Source: AAP

4 min read

Published

By Raysel


Skip to article content

பெட்ரோல் விலைகுறைப்பு    

நாட்டில் அதிகரித்துவரும் பெட்ரோல் விலையை குறைக்கும் வகையில் அரசு வசூலிக்கும் எரிபொருள் மீதான வரி 50 சதவீதம் குறைக்கப்படுகிறது. தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அரசு 44.2 சென்ட் வரியாக வசூலிக்கிறது. ஆனால் இந்த வரி நேற்று இரவு முதல் 22.1 சென்ட் என்று குறைக்கப்பட்டுள்ளது. எனவே நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் $2 டாலர் என்றிருந்தால் அது இன்று $1.78 என்று குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு தற்காலிகமாக 6 மாதங்கள் நடைமுறையில் இருக்கும்.இப்படியான வரிக்குறைப்பின்படி பெட்ரோல் விலையை குறைக்காமால் பெட்ரோல் விலையை கூட்டி விற்பனை செய்தால் அத்தகைய பெட்ரோல் நிலையங்கள் மீது அரசின் Australian Competition and Consumer Commission (ACCC) அமைப்பு கடுமையான அபராதம் விதிக்கும் என்று அரசு எச்சரித்துள்ளது.  

வீடுவாங்கஉதவி

நாட்டில் அதிகரித்து வரும் வீட்டு விலை காரணமாக பலர் வீடு வாங்க இயலாமற்போகும் நிலை உள்ளது. எனவே அதிகமான  மக்கள் சொந்த வீடு வாங்கும் வகையில் தற்போது அரசு நடைமுறைப்படுத்திவரும் வீட்டு உத்தரவாதத் திட்டம்  விரிவுபடுத்தப்படுகிறது. First Home Guarantee எனும் அரசி திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் தற்போது 10,000 பேருக்கு  அரசு வழங்கி வரும் உத்தரவாதம் ஜூலை 1 முதல் 35,000 பேருக்கு வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் வீடு வாங்குபவரின் வீட்டுக் கடனின் ஒரு பகுதிக்கு அரசு வங்கிக்கு உத்தரவாதம் தரும்.  ஆகவே ஒரு சிறிய வைப்புத்தொகையுடன் ஒருவர்  சொந்தமாக வீடு வாங்க இயலும். குறிப்பாக ஒருவர் வீட்டின் விலையில் 5 சதவீத வைப்பு நிதியை செலுத்தி தனது முதலாவது வீட்டை வாங்க முடியும்.

வரிச்சலுகை  

ஒருவரின் ஆண்டு வருமானம் $126,000க்கும் குறைவாக இருந்தால் அவர் வருமான வரிச் சலுகை பெறுகிறார். ஆண்டு வருமானம் $126,000க்கும் குறைவாக இருக்கின்ற ஒருவருக்கு தற்போது $255 முதல் $1080 வரை வழங்கப்பட்டு வருகிறது. இந்த வரிச்சலுகை $420 அதிகரிக்கப்படுகிறது. எனவே ஒருவரின் ஆண்டு வருமானம் $126,000க்கும் குறைவாக இருந்தால் ஜூலை ஒன்றாம் தேதி முதல் $675 முதல் $1,500 வரை வருமான வரிச் சலுகை பெறுவார். இந்த வரிச் சலுகை மூலம் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டும் சுமார் ஒரு கோடி மக்கள் (10 மில்லியன்) பயனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குழந்தைபெறும் பெற்றோருக்குச் சலுகை

Paid parental leave எனப்படும் குழந்தை பெறும் பெற்றோருக்கு வழங்கப்படும் நிதி உதவி திருத்தியமைக்கபடுகிறது. தற்போது "Dad and Partner Pay" எனப்படும் இரண்டு வார கால உதவி ஒரு தந்தைக்கு அல்லது துணைவருக்கு வழங்கப்படுகிறது. ஆனால்  "Parental Leave Pay" எனப்படும் 18 வார நிதி உதவி குழந்தை பெற்றெடுக்கும் பெண்ணுக்கு தரப்படுகிறது. ஆனால் மாற்றியமைக்கப்படும் Paid Parental Leave திட்டப்படி ஆணுக்கு தரப்படும் 2 வாரம்,  பெண்ணுக்கும் தரப்படும் 18 வாரங்கள் ஒன்றாக சேரக்கப்பட்டு  மொத்தம்  20 வாரங்கள் அந்த தம்பதிக்கு தரப்படும். அவர்கள், அந்த வாரங்களைப் பிரித்துக்கொள்ளலாம். இதற்காக அரசுக்கு எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கு அதிகமாக $346.1 மில்லியன் டாலர் செலவாகும்.

பெண்கள்நலம்  

பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிராக நிகழ்த்தப்படும் வன்முறை பிரச்சனைகளைக் கையாள அரசு மேலதிகமாக $1.3 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கியுள்ளது.

குடியேறுவோர் எண்ணிக்கைஅதிகரிப்பு

கொரோனா பரவல் காரணமாக ஆண்டுதோறும் ஆஸ்திரேலியாவுக்கு குடியேறுவோர் எண்ணிக்கை இரண்டாவது உலகப்போர் காலத்திற்குப் பின்னர் முதற்தடவையாக 2020-21 இல் பெருமளவில் குறைந்திருந்தது. ஆனால் எதிர்வரும் நிதியாண்டில் (2023-24) இந்த எண்ணிக்கை 213,000 பேர் நாட்டில் புதிதாக குடியேறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அகதி எண்ணிக்கை அதிகரிப்பு

Humanitarian visa program-மனிதாபிமான அடிப்படையில் உள்வங்கப்படும் அகதிகளின் எண்ணிக்கை, முந்தைய இரண்டு ஆண்டுகளைப் போலவே 13,750 என்று தொடர உள்ளது. ஆனால் ஆப்கானிஸ்தான் நாட்டவர்களுக்கு எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்கு மொத்தமாக 16,500  இடங்கள் புதிதாக தரப்படுகின்றன. இதற்காக $665.9 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Centrelink உதவி அதிகரிப்பு

அரசின் ஓய்வூதியம் பெறுவோருக்கும் மற்றும் அரசின் Centrelink மூலம் கொடுப்பனவு அல்லது நிதி உதவி பெறும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக $250 வழங்கப்படும். இதன் மூலம் அறுபது லட்சம் (ஆறு மில்லியன்) மக்கள் பயனடைவர். மேலும் முதியோர் ஓய்வூதியம், ஊனமுற்றோர் ஆதரவு ஓய்வூதியம் மற்றும் பராமரிப்பாளர் கொடுப்பனவு – இப்படியான நிதி உதவிகளைப் பெறுவோரின் உதவி விகிதம் அதிகரிப்படுகிறது. இதன்படி,  தனி நபர் ஒருவருக்கு பதினைந்து நாட்களுக்கு $20 மற்றும் தம்பதியினருக்கு $30 இந்த நிதி உதவி அதிகரிக்கப்படுகிறது. இவர்கள் செப்டம்பரில் மீண்டும் இதேபோன்ற அதிகரிப்பைப் பெறுவார்கள்.

முதியோர் பராமரிப்புக்கு- அதிக நிதி

முதியோர் பராமரிப்புத்துறை தொடர்பாக அரசு Royal Commission அமைத்து விரிவான விசாரணை அமைத்தது நமக்கு நினைவிருக்கும். இந்த பின்னணியில், இந்த விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துப் பரிந்துரைகளையும் செயல்படுத்தும் முயற்சியில், 17.7 பில்லியன் டொலர் மதிப்புள்ள நிதி திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என கடந்த ஆண்டு அரசு அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து முதியோர் பராமரிப்புத்துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் பணிபுரிய திட்டமிடுகின்றவர்களுக்குக்கென்று 15,000 தொழிற்கல்வி மற்றும் பயிற்சி இடங்களுக்கென 49.5 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்படுகிறது. மட்டுமல்ல, முதியோர் பராமரிப்புத்துறை ஊழியர்களுக்கு சுமார் 800 டொலர்கள் வரையிலான ஊக்கத்தொகை இரு கட்டங்களாக வழங்கப்படவுள்ளது. முதற்கட்டமாக 400 டொலர்களும் இரண்டாம் கட்டமாக 400 டொலர்களும் வழங்கப்படவுள்ளது.

பாதுகாப்புக்கு அதிக நிதி

பாதுகாப்பு படைக்கு சுமார் $575பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில், கிட்டத்தட்ட பாதியளவு நிதி பாதுகாப்பு படைவீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வழங்கப்படவுள்ளது. குறிப்பாக, சுமார் 18,500 புதிய பணியாளர்கள் நியமனத்திற்கு $38 பில்லியன் டாலரும், போர் கப்பல்களுக்கு $50 பில்லியன் டாலரும், கடற்படை உட்கட்டமைப்புக்காக $10 பில்லியன் டாலரும் ஒதுக்கப்படுள்ளன. மட்டுமல்ல, cybersecurity மற்றும் intelligence capabilities எனப்படும் இணைய பாதுகாப்பு மற்றும் உளவு சேகரிக்கும் திறனை அதிகரித்தல் எனும் மிகவும் நுட்பமான நாட்டின் பாதுகாப்பு திட்டங்களுக்கு Australian Signals Directorate அமைப்புக்கு $9.9 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்படுள்ளது.  

கட்டுமானப்பணிக்கு அதிக நிதி  

நாட்டில் சாலை, ரயில் கட்டுமானப் பணிகளுக்கு அரசு $17.9 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கியுள்ளது. குறிப்பாக சிட்னி – நியூகாசில் அதிவேக ரயில் திட்டத்திற்கு $3.7 பில்லியன் டாலர் நிதி, கனரக வாகனம், லாரிகள் போன்றவைகளை நிறுத்தவும், சரக்குகளை ரயிலுக்கு மாற்றவும் என்று  மெல்பன் நகருக்கு வெளியில் $3.1 பில்லியன் டாலர் செலவில் இரு பெரும் மையங்கள் அமைக்கப்படும் என்றும் இது மெல்பன் – பிரிஸ்பன் தூர பயணம் மேற்கொள்ளும் கனரக வாகனங்களின்


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now