SKIP TO MAIN CONTENT

நிதிநிலை அறிக்கை 2023: நீங்கள் கட்டாயம் தெரியவேண்டியவை

பெடரல் அரசின் 2023-24ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நேற்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் நாட்டின் கருவூலக் காப்பாளர் Treasurer Jim Chalmers சமர்ப்பித்தார். நாட்டில் அனைவரையும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய வாழ்க்கைச் செலவு அழுத்தங்களுக்கு சில நிதி உதவிகள், முதியோர் பராமரிப்புப் பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் குழந்தைப் பராமரிப்பு செலவுக்கு அதிக மானியம் என்று பல அம்சங்கள் இந்த நிதி நிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. அவைகளை நாம் விரிவாக இந்த கட்டுரையில் பார்ப்போம்.

FEDERAL BUDGET 2023
A generic image of the cover of the Budget papers taken in the Budget lockup at Parliament House in Canberra, Tuesday, May 9, 2023. Australian Treasurer Jim Chalmers will today hand down the 2023/24 Federal Budget. (AAP Image/Lukas Coch) NO ARCHIVING Source: AAP / LUKAS COCH/AAPIMAGE

3 min read

Published

Updated

By Raysel

Source: SBS


Skip to article content

முதியோர் பராமரிப்பு பணியாளர்களுக்கு அதிக ஊதியம்    

PENSIONER STOCK
An sign is seen outside an aged-care facility on the Gold Coast, Thursday, April 23, 2015. (AAP Image/Dave Hunt) NO ARCHIVING Source: AAP / DAVE HUNT/AAPIMAGE

முதியோர் பராமரிப்புக்கு அரசு அதிகம் செலவிட திட்டமிட்டுள்ளது. ஜூலை முதல், சுமார் இரண்டரை லட்சம் முதியோர் பராமரிப்புப் பணியாளர்கள் 15 சதவீத ஊதிய உயர்வைப் பெறுவார்கள். அதிலும் குறிப்பாக, முதியோர் பராமரிப்பில் பணியாற்றும் ஒரு Registered Nurse - பதிவு செய்யப்பட்ட செவிலியருக்கான ஊதியம் ஆண்டுக்கு $10,000க்கும் அதிகமாகவும், Enrolled Nurse செவிலியருக்கு ஆண்டுக்கு $7,500க்கும் அதிகமாகவும் உயரும். இதற்காக அரசு சுமார் 11.3 பில்லியன் டாலர் அதிக செலவு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

முதியவர்கள் பாரமரிப்பு இல்லங்களுக்கு செல்வதை தவிர்த்துவிட்டு அவர்களின் வீடுகளிலேயே தொடர்ந்து வாழ விரும்புவது அதிகரித்து வருவதால், முதியோர் பராமரிப்புக்கான கொடுப்பனவுகளில் அடுத்த மூன்று ஆண்டுகளில் அரசுக்கு $2.2 பில்லியன் செலவு குறையும் என்று கருவூலம் கணித்துள்ளது.

குழந்தை பராமரிப்பு செலவு குறைகிறது

Childcare costs
File photo dated 08/02/12 of a child playing, as two in five mothers say the cost of childcare is preventing them from returning to work, new research suggests.. Issue date: Friday April 14, 2023. A survey of 2,000 mothers by jobs site Indeed Flex indicated that a similar number believed the Government's pledge of an increase in free childcare provision was enough to help them go back to work. See PA story INDUSTRY Mothers. Photo credit should read: Dominic Lipinski/PA Wire Credit: Dominic Lipinski/PA/Alamy

சுமார் 12 லட்சம் குடும்பங்களுக்கு குடும்பங்களுக்கு குழந்தை பராமரிப்பு செலவு குறையப்போகிறது. ஜூலை முதல் குழந்தைப் பராமரிப்பு செலவைக் குறைக்க அரசாங்கம் அடுத்த நான்கு ஆண்டுகளில் $55 பில்லியன் டாலர் செலவிட திட்டமிட்டுள்ளது.

$530,000க்குக் குறைவான குடும்ப வருமானம் உள்ள குடும்பங்களுக்கும் குழந்தைப் பராமரிப்பில் அதிக மானியம் கிடைக்கப்போகிறது. குறைந்த வருமானம், குறிப்பாக $80,000க்கும் குறைவாக சம்பாதிக்கும் குடும்பங்களுக்கு, அவர்களின் முதல் குழந்தைக்கு மானியம் 90 சதவீதமாக உயரும். $80,000க்கு மேல் உள்ளவர்களுக்கு, அவர்களின் வருமானத்தின் அடிப்படையில் அந்த மானியம் படிப்படியாக குறையும்.

மின்சாரக் கட்டணம் குறைகிறது  

ELECTRICITY STOCK
A high voltage electricity transmission tower is seen in the foreground of the Brisbane CBD skyline in Brisbane, Tuesday, January 15, 2019. (AAP Image/Darren England) NO ARCHIVING Source: AAP / DARREN ENGLAND/AAPIMAGE

சுமார் ஐம்பது லட்சம் குடும்பங்களும், சுமார் பத்து லட்சம் சிறு வணிக நிறுவனங்களும் பயனடையும் வகையில் 500 டாலர்வரை மின்சார கட்டண சலுகை தரப்படுகிறது. சிறு வணிகங்களுக்கும் 650 டொலர்கள் வரை மின்சார கட்டண சலுகை வழங்கப்படும்.

இதன் மூலம் பின்வரும் பிரிவினர் சலுகை பெறுவார்:

Pensioners, veterans, seniors and other concession card holders (முதியோர், பாதுகாப்புபடையின் முன்னர் வீரர்கள், concession card வைத்திருப்போர்.

Carer allowance and family tax benefit பெறுவோர்

People in existing state and territory electricity concession schemes.

Centrelink கொடுப்பனவு உயர்கிறது

AUSTRALIAN JOBS COVID-19
A close up of a Centrelink sign in Norwood, Adelaide. Thursday, April 16, 2020. The Australian Government has announced even tighter restrictions around social gatherings, and boosted stimulus spending, in attempts to fight off the coronavirus and it's affects on the economy. (AAP Image/David Mariuz) NO ARCHIVING Source: AAP / DAVID MARIUZ/AAPIMAGE

JobSeeker கொடுப்பனவு பெறுகின்ற சுமார் 900,000 க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் இருவாரங்களுக்கான(fortnightly) கொடுப்பனவாக 40 டொலர்களை கூடுதலாக பெறவுள்ளனர். இருவாரங்களுக்கான கூடுதல் 40 டொலர்கள் கொடுப்பனவு, Youth Allowance, Austudy மற்றும் பிற அரச கொடுப்பனவு பெறுபவர்களுக்கும் கிடைக்கவுள்ளது. மேலும், குழந்தை இல்லாத ஒரு நபர் எனில், அவருக்கு இருவாரங்களுக்கு 730 டொலர்களுக்கு மேல் கிடைக்கும். இதன் மூலம் பின்வரும் பிரிவினர் கூடுதல் கொடுப்பனவு பெற தகுதி பெறுகின்றனர்:

JobSeeker, Youth Allowance, The Partnered Parents Payment, Austudy, ABSTUDY, The Youth Disability Support Pension & The Special Benefit Payment

Single-parent கொடுப்பனவு தற்போது ஒரு குழந்தை 8 வயதானதும் நிறுத்தப்படுகின்றநிலையில், இது இனி குழந்தை 14 வயது ஆகும்வரை தொடரவுள்ளது. இந்த சலுகையினால் அரசுக்கு எதிர்வரும் இரு ஆண்டுகளில் மட்டுமே $1.9 பில்லியன் டாலர்கள் செலவாகும் என்று கணக்கிடப்படுகிறது.

Commonwealth Rent Assistance -அரசின் வாடகை உதவிப் பணத்தைப் பெறுபவர்கள் இந்த நிதிநிலை அறிக்கையின் ஊடாக 15 வீத அதிகரிப்பைப் பெறவுள்ளனர்.

GP ஐப் பார்ப்பது எளிதாகிறது  

MEDICAL FEES PROPOSAL
A General Practitioner medical clinic in Sydney, Monday, Dec. 30, 2013. Labor says a $5 fee for bulk-billed GP visits would put extra pressure on the public health system by clogging up hospital emergency departments. (AAP Image/Dan Himbrechts) NO ARCHIVING Source: AAP / DAN HIMBRECHTS/AAPIMAGE

மருத்துவர்களை இலவசமாக அதாவது bulk bill என்ற அடிப்படையில் பார்ப்பது எளிதானதல்ல என்ற நிலை நாட்டில் நிலவுகிறது. எனவே

16 வயதிற்குட்பட்டவர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் பிற Commonwealth concession அட்டை வைத்திருப்பவர்கள், மருத்துவர்களை இலவசமாக(bulk bill) பார்வையிடுவதற்கு ஏதுவாக, குடும்ப மருத்துவர்களுக்கு மும்மடங்கு bulk billing ஊக்கத்தொகையை அரசு வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. இதன்மூலம் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் (11.6 million) பலன் பெறுவார். இப்படி மருத்துவர்களை இலவசமாக அதாவது bulk bill என்ற அடிப்படையில் பார்ப்பதற்கு அரசு எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கு மேலும் அதிகமாக $3.5 பில்லியன் டாலர் செலவிட திட்டமிட்டுள்ளது.

 

 —————————————————————————————————————————————————————————————————————————————————————————

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now