SKIP TO MAIN CONTENT

13 வருட சேவையை நிரந்தரமாக நிறுத்தியது Tigerair!

World's cheapest airlines for 2018.
Source: AAP

2 min read

Published

Updated


Skip to article content

ஆஸ்திரேலியாவின் மலிவான உள்ளூர் விமான சேவையாக சுமார் 13 வருடங்களாக வான் வழியை ஆட்சிபுரிந்துவந்த Tigerair தனது பணியை நிரந்தரமாக நிறுத்திக்கொண்டது.

நேற்று வியாழக்கிழமை இந்த அறிவிப்பினை விமானசேவை நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

விமானசேவையின் தாய் நிறுவனமான Virgin Australia நிறுவனம் மேற்கொண்ட தீர்மானத்தின் பிரகாரம், இந்த துயரமான முடிவு எடுக்கப்பட்டதாக வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் வழியாக Tigerair தெரியப்படுத்தியுள்ளது.

கடந்த பல மாதங்களாகவே நட்டத்தில் இயங்கிய Tigerair-ஐ கொரோனா பரவல் மேலும் இக்கட்டுக்குள் தள்ளியது.

இதனையடுத்து, கடந்த பெப்ரவரி மாதம் விமானத்தின் ஆறுசேவைகள் நிரந்தரமாக நிறுத்தப்பட்டிருந்தன.

கடந்த 2007 ஆம் ஆண்டு மெல்பேர்னிலிருந்து Gold Coast-க்கு முதலாவது பறப்பினை மேற்கொண்டதிலிருந்து, கடந்த 13 வருடங்களில் சுமார் மூன்று கோடி பயணிகளுக்கு  Tigerair சேவையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tigerair விமானசேவைக்கான டிக்கெட்டுகளை வாங்கியவர்கள் Virgin Australia-ஆல் இயக்கப்படும் சேவைகளுக்கு அதைப் பயன்படுத்தக்கூடியவாறு travel credit பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline- 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல்தொண்டை நோவுஇருமல்உடற்சோர்வுசுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now