"நல்லகாலம் வருகிறது"

கருவூலக் காப்பாளர் Scott Morrison நேற்று வெளியிட்ட வரவு செலவுத்திட்டம் சிலரிடையே வரவேற்பையும் சிலரிடையே எதிர்வினையான தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளாது. வரவு செலவுத்திட்டம் அறிவிப்பது Scott Morrisonற்கு இரண்டாவது முறை என்பது அவதானிக்கத்தக்கது. மருத்துவ, சுகாதார சீர்திருத்தங்களை மக்கள் வரவேற்றுள்ளார்கள். 2014ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தை Joe Hockey சமர்ப்பித்த போது இழந்த நம்பிக்கையை, அரசு ஓரளவு மீளப் பெறுகிறது என்று ஆஸ்திரேலிய மருத்துவ சங்கத்தினர் கூறுகின்றனர். ஆனால் சமூக நலன்புரி திட்டங்கள் பாரிய பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகப் பலத்த விமர்சனத்தை அரசு எதிர் கொண்டுள்ளது. வேலை தேடுபவர்கள் மானியம் பெறுபவர்களாக இருந்தால், அவர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. வேலை தேடும்போது அகப்படும் வேலை அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்று நிராகரிக்க முடியாது, நேர்காணலுக்குச் செல்லாமல் விடுவது, கொடுக்கப்பட்ட நேரத்திற்கு வேலை குறித்த சந்திப்புகளைச் செய்யாமல் இருப்பது போன்ற செயல்களுக்குத் தண்டனையை இவர்கள் அனுபவிக்க வேண்டியிருக்கும். அதுமட்டுமல்ல, போதைப் பொருள் மற்றும் மது பாவனை குறித்த சோதனைகளுக்கு இவர்கள் உட்படுத்தப்படுவார்கள். மற்றும், மானியங்கள் பணமாக வழங்கப்படாமல், debit card எனப்படும் நாணய அட்டையில் வழங்குவதற்கும் அரசு ஆலோசித்து வருகிறது.

Rachel Siewert has criticised the federal government's healthy welfare card

The Federal Government's welfare card has faced no shortage of criticism.

ஆஸ்திரேலியாவின் ஐந்து மிகப் பெரிய வங்கிகள் புதிய வரி செலுத்தப் போகிறன.  அடுத்த நான்கு ஆண்டுகளில் 6 பில்லியன் டாலர்களை வங்கிகள் கட்டும் என கருவூலக்காப்பாளர், பொருளாளர் Scott Morrison கூறுகிறார். 

ஆனால் அவர்கள் கட்டுகின்ற வரியை, நுகர்வோரிடமிருந்து மீளப்பெறக்கூடாது என்று கருவூலக்காப்பாளர் வங்கிகளை வலியுறுத்தியுள்ளார். 

பணவீக்கத்தை எதிர்கொள்ள, மருத்துவ செலவுக்கு வழங்கப்படும் தொகையை அதிகரிக்கும் நடவடிக்கைகளையும் புதிய வரவு செலவுத் திட்டம் உள்ளடக்கியுள்ளது. 

Pharmaceutical Benefits Scheme திட்டத்திலுள்ள மருந்துகளின் செலவுகளும் குறையப் போகின்றன.  இவையெல்லாம், 2014ல் Tony Abbott தலமையிலான அரசு விட்ட தவறுகளை நிவர்த்தி செய்யும் என்று ஆஸ்திரேலிய மருத்துவ சங்கம் சொல்கிறது. 

அடுத்த தசாப்தத்தில், நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த 75 பில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

ஆனால், 2017ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் மிகவும் சர்ச்சைக்குரிய நடவடிக்கையாக சமூக நலன்புரிக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பெரும் மாற்றங்கள் அமைந்துள்ளன.


 

சமூக நலன்புரி பயனாளிகளான ஆயிரக்கணக்கான இளைஞர்கள், மூன்று சோதனை தளங்களில், போதைப் பொருள் பாவனக்கான பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

வேலை தேடுபவர்கள் தம் கடமைகளை ஒழுங்காகச் செய்கிறார்களா என்பதைக் கணிக்க ஒரு புதிய திட்டம் அறிமுகமாகிறது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில், இரண்டு புதிய இடங்களில், மானியங்கள் பணமாக வழங்கப்படாமல், debit card எனப்படும் நாணய அட்டைமூலம் வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  பின்னர், இந்த செயற்பாடு நீட்டிக்கப்பட்டு, விரிவாக்கப்படும்.

சமூக நலன்புரி மானியம் பெறுபவர்கள் மூன்று முறை தவறிழைத்தால், மானியத் தொகை குறைக்கப்படும் அல்லது நிறுத்தப்படும்.  இதனால், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 630 மில்லியன் டொலர்களை அரசு சேமிக்கும்.

வேலை தேடும்போது அகப்படும் வேலை அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்று தொடர்ந்து நிராகரிப்பவர்கள், வேலை தேடும்போது குறித்த நேர்காணலுக்குச் செல்லாமல் விடுப்வர்கள், கொடுக்கப்பட்ட நேரத்திற்கு வேலை குறித்த சந்திப்புகளைச் செல்லாதவர்கள் எல்லோரும் தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கும்.  முதல் தடவை குற்றம் இழைத்தவர், இருவார காலத்தில் அவர்கள் பெறும் மானியத்தில் பாதியை இழப்பார்கள்.  இரண்டாவது தடவை குற்றம் இழைத்தவர், இருவார காலத்தில் அவர்கள் பெறும் மானியத்தில் முழுவதையும் இழப்பார்கள்.  மூன்றாம் தடவை குற்றம் இழைத்தவர், நான்கு வார காலத்தில் அவர்கள் பெறும் மானியத்தை முற்றாக இழப்பார்கள்.

அடுத்த வருடத்திலிருந்து, சில பெறுநர்கள் போதைப் பொருள் பாவனைக்கான சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

வேலையில்லாதோருக்கு வழங்கப்படும் மானியம் பெறுவோர் யாராவது போதைப் பொருட்களோ, மதுவுக்கு அடிமையாகியிருந்தால், அவர்களுக்கு வழங்கப்படும் மானியம் நிறுத்தப்படலாம்.

மானியம் பெறும் ஒருவர், போதைப் பொருள் பாவிக்கிறார் எனப் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டால், அவருக்கு மானியங்கள் பணமாக வழங்கப்படாமல், debit card எனப்படும் நாணய அட்டையின் மூலமாக மட்டுமே வழங்கப்படும்.  இதன் மூலம் இவர்கள் போதைப் பொருள் வாங்குவதைத் தடுக்கலாம் என அரசு யோசிக்கிறது.


2 min read

Published

Updated

By Kulasegaram Sanchayan




Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now