SKIP TO MAIN CONTENT

2017 வரவு செலவுத்திட்டம்: வீடு வாங்குவோர் விற்போர்

நேற்று வெளியான வரவு செலவுத் திட்டத்தில், முதன் முறையாக வீடு வாங்க நினைப்பவர்களுக்கு நல்ல சேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

The government wants to increase housing supply through several budget measures.
The government wants to increase housing supply through several budget measures. Source: AAP

1 min read

Published

By Kulasegaram Sanchayan



Skip to article content

ஒரு வீடு வாங்குவதற்காக, superannuation எனும் ஓய்வூதியத் திட்டத்தில் மேலதிக பணத்தை சேமிக்க முடியும்.  ஆனால் நீங்கள் சேமிக்கக்கூடிய தொகை வருடத்திற்கு  15,000 டொலர் மற்றும் மொத்தமாக 30,000 டொலர் என மட்டுப்படுத்தப்படும்.

 

தம்பதியினர் என்றால், இருவரும் தனித்தனியாக சேமிக்க முடியும்.

 

65 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாம் வாழும் வீட்டை விட்டு, ஒரு சிறிய வீட்டிற்குக் குடியேறும்போது அவர்கள் சேமித்துள்ள பணத்தில் 300,000 டொலர்கள் வரை Superannuation எனப்படும் ஓய்வூதிய நிதியத்தில் வைப்பு செய்யலாம்.

 

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆஸ்திரேலியாவில் வீடுகள் வாங்குவதைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய நடவடிக்கைகள், புதிய வரவுசெலவுத் திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

 

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதிலிட்ட வீடுகள் காலியாக இருந்தால், அதற்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படும். ஒருவருடத்தில் குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு அவர்கள் வீட்டில் யாரும் வாழாவிட்டால், அல்லது வாடகைக்கு விடப்படும் என்று வாடகை சந்தையில் விளம்பரப்படுத்தப் படாமல் இருந்தால், 5,000 டொலர் கட்டணம் செலுத்த வேண்டும்.

 

வெளிநாட்டு உரிமையாளர்கள் வசிக்கும் வீட்டை விற்கும்போது, capital gains tax எனப்படும் மூலதன இலாப வரி செலுத்த வேண்டும்.  புதிய கட்டுமானங்களில் வெளிநாட்டவர்கள் 50 சதவிகிதத்திற்கு மேல் உரிமை கொள்ள முடியாது.

 

 

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now