SKIP TO MAIN CONTENT

நிர்வாண படங்களை விற்று காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் ஆஸ்திரேலிய அழகி!

Fb
Source: Facebook

1 min read

Published

Updated


Skip to article content

Gold Coast பகுதியைச் சேர்ந்த playboy மொடல் அழகி ஒருவர் தனது நிர்வாண படங்களை இணையத்தில் விற்பனை செய்து, அந்தப்பணத்தை காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.

தனது காதலன்தான் தனக்கு இந்த யோசனையை சொன்னதாகவும் இந்த நிதிசேகரிக்கும் திட்டத்துக்கு அவர்தான் மிகுந்த உறுதுணையாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இணையத்தில் பதிவேற்றப்படும் தனது ஒன்பது நிர்வாண படங்களை பார்ப்பதற்கு 15 டொலர்கள் என்றும் முழுப்படங்களையும் பார்ப்பதற்கு 100 டொலர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இணையத்தில் விற்பனை செய்கின்ற சகல படங்களையும் எடுப்பதற்கு தனது காதலன்தான் உதவிசெய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்ட மக்கள்படுகின்ற துயரத்தை பார்க்கும்போது இதனைவிடத்தான் என்ன செய்துவிடமுடியும் என்று தன் துயரத்தையும் படங்களையும் பகிர்ந்துகொள்ளும் இந்த மொடல் அழகி Jaylene Cook தெரிவித்துள்ளார்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now