SKIP TO MAIN CONTENT

காட்டுத்தீயினால் ஆஸ்திரேலிய சுற்றுலாத்துறைக்கு நூறு கோடி டொலர் நட்டம்!

Bushfire
Bushfire Source: AAP

1 min read

Published

Updated


Skip to article content

ஆஸ்திரேலியாவின் பல்வேறு மாநிலங்களையும் பேரழிவுக்குள்ளாக்கிய காட்டுத்தீ நாட்டின் சுற்றுலாத்துறையில் நூறு கோடி டொலர் நட்டத்தினை ஏற்படுத்தியிருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

நியூ சவுத்வேல்ஸ் மற்றும் விக்டோரிய மாநிலங்களின் புறநகர்பகுதிகளில் உள்ள சுற்றுலா மையங்களில் தங்கியிருந்து உல்லாசப்பயணம் செய்வதற்கு பதிவுகளை மேற்கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கானவர்கள் அவற்றை ரத்துச்செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், சுற்றுலாத்துறை ஊடாக நாட்டின் பொருளாதாரத்துக்கு கிடைக்கவிருந்த வருமானத்திற்கு பெரும் அடி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுதவிர வளி மண்டலத்தில் காணப்படும் புகைப்படலத்தினால் ஆஸ்திரேலியாவின் பெரு நகரங்களுக்கான வருகையை பல வெளிநாட்டவர்கள் ரத்து செய்திருக்கிறார்கள் என்றும் வாகனத்துறையும் காட்டுத்தீயினால் மிகப்பயங்கரமாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சுற்றுலாத்துறையை மீண்டும் சரிப்படுத்துவது தொடர்பாக இந்தவாரம் பிரமதர் ஸ்கொட் மொறிஸனை சுற்றுலாத்துறை அமைச்சினர் சந்தித்து பேசவுள்ளார்கள்.

இதேவேளை, ஆஸ்திரேலியாவுக்கான பயணங்களுக்கு வெளிநாடுகள் விதித்துள்ள பயண எச்சரிக்கைகளை நீக்கும்படி குறிப்பிட்ட நாடுகளிடம் பிரதமர் ஸ்கொட் மொறிஸன் தனிப்பட கோரிக்கைகளையும் முன்வைக்கவுள்ளார்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now