SKIP TO MAIN CONTENT

சிறையிலிருந்து கைதிகள் தப்பியோட்டம்-எச்சரிக்கையாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்!

A perimeter fence at a jail
File image (AAP) Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

மேற்கு ஆஸ்திரேலியாவின் பிராந்திய நகரொன்றில் அமைந்துள்ள சிறைச்சாலையிலிருந்து சுமார் 10 கைதிகள் தப்பித்துள்ளார்கள் என்று பொலீஸார் அறிவித்துள்ளனர்.

தப்பியோடிவர்களில் 5 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் ஏனையோரை கைது செய்வதற்கு பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் பொலீஸார் தெரிவித்துள்ளனர்.

பேர்த் நகரத்திலிருந்து வடக்கு நோக்கி சுமார் 420 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள Greenough Regional சிறைச்சாலையிலிருந்தே இந்த கைதிகள் தப்பியோடியுள்ளார்கள் என்று அறியவருகிறது.

சுமார் 332 பேர்கள் வரை தடுத்துவைக்கக்கூடிய இந்த சிறைச்சாலையில் ஆண்கள் மற்றும் பெண்கள் வெவ்வேறு பிரிவுகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்கள் என்றும் செவ்வாய்க்கிழமை மாலை இந்த சிறையுடைப்பு இடம்பெற்றுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தப்பியோடியவர்கள் சிறைச்சாலையை சூழவுள்ள பகுதிகளில்தான் பதுங்கியிருப்பதற்கு வாய்ப்புக்கள் அதிகம் என்பதால் அப்பகுதிவாழ் மக்களை கதவுகைளத் தாழிட்டு வைத்துக்கொள்வதுடன் அனைவரையும் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now