இந்தியாவின் கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைத் திருமணம் செய்ய முயன்ற இளம்பெண்ணைத் திருமணத்துக்கு சிலமணிநேரத்துக்கு முன் அவரின் தந்தையே குத்திக்கொலை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலப்புரம் மாவட்டம், அரீகோட் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிரா (வயது 22). இவர் மஞ்சேரி மருத்துவக் கல்லூரியில் டயாலிசிஸ் பிரிவில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஆதிரா ஒரு இளைஞரை காதலிக்கத் துவங்கினார். இந்த இளைஞர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள். இளைஞர் தலித் சமூகத்தைச் சார்ந்தவர். இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்கு ஆதிரையின் தந்தை ராஜன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் கோழிக்கோடு நகரில் நேற்று வெள்ளிக்கிழமை திருமணம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருநத்து. திருமண ஆசையோடு ஆதிரா மணப்பெண் மண்டபத்தில் காத்திருந்தார். இவ்வேளையில் மது அருந்திவிட்டு அதிகமான போதையில் திருமண மண்டபத்துக்கு வந்த தந்தை ராஜன் தனது மகள் ஆதிராவுடன் திருமணத்தை நிறுத்தக் கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் தொடர, கத்தியால் மகள் ஆதிராவைக் குத்திக் கொலை செய்தார். இது ஆணவக் கொலை என்று பார்க்கப்படுகிறது.
