சிட்னிக்கும் லண்டனுக்கும் இடையிலான இடைத்தரிப்பற்ற நேரடி விமான சேவை 2023 ஆம் ஆண்டளவில் சாத்தியமாகும் வாய்ப்புள்ளதாக Qantas தெரிவித்துள்ளது.
உலகின் மிக நீண்டதூர பயணிகள் விமான சேவையாக செயற்படவுள்ள இந்த விமான சேவைக்குரிய விமானங்களை கொள்முதல் செய்வதில் Qantas தற்போது பேச்சு நடத்திவருவதாக தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துடன் இந்தப்பேச்சுக்கள் நிறைவடைந்து 2022 ஆம் ஆண்டளவில் இந்த 21 மணி நேர பயணத்துக்கேற்ற விமானங்கள் கொள்முதல் செய்யப்பட்டால் 2023 ஆம் ஆண்டளவில் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்று Qantas கூறியுள்ளது.
புதிய விமானங்கள் கொள்முதல் செய்யப்பட்ட பின்னர், மெல்பேர்னிலிருந்து லண்டனுக்கான சேவை மற்றும் சிட்னியிலிருந்து நியூயோர்க்கிற்கான சேவை மற்றும் ஆஸ்திரேலியாவின் ஏனைய சர்வதேச விமானநிலையங்களிலிருந்து ஐரோப்பிய நகரங்களுக்கான சேவை ஆகியவற்றையும் மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக Qantas தெரிவித்துள்ளது.
Share
