SKIP TO MAIN CONTENT

சிட்னி – மெல்பன் வான் டாக்சி சேவை அறிமுகமாகிறது!

சிட்னி – மெல்பன் வான் டாக்சி சேவை அறிமுகமாகிறது!

Flying Taxi
Source: Uber

1 min read

Published

By Raymond Selvaraj


Skip to article content

சிட்னியிலிருந்து மெல்பனுக்கு அல்லது மெல்பனிலிருந்து சிட்னிக்கு அதி விரைவில் செல்லும் வகையில் வான்வழி பறக்கும் டாக்சி சேவையை அறிமுகம் செய்ய Uber நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இன்னும் இரண்டு  ஆண்டுகளில், அதாவது 2020 ஆம் ஆண்டு இந்த சேவையை ஆஸ்திரேலியாவில் அறிமுகம் செய்யும் Uber நிறுவனம், இன்னும் ஐந்து ஆண்டுகளில் அதாவது 2023 ஆண்டுக்குள் இந்த சேவையை உலகம் முழுவதும் விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது.

இந்த பறக்கும் டாக்சி UberAir என்று அழைக்கப்படும் என்றும், கட்டணம் UberX ride போன்று சராசரியாகவே இருக்கும் என்றும் Uber நிறுவனம் கூறுகிறது.

உலகிலே முதன்முதலாக பறக்கும் டாக்சி சேவை ஆஸ்திரேலியாவில்தான் அறிமுகமாகிறது என்றும், இது தொடர்பாக ஆஸ்திரேலிய போக்குவரத்து அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது என்றும் Uber நிறுவனம் கூறுகிறது.

சிட்னியிலிருந்து மெல்பனுக்கு மட்டுமல்லாது, சிட்னி அல்லது மெல்பன் பெருநகரங்களில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு விரைவாக செல்லவும் இந்த பறக்கும் டாக்சி சேவையை அறிமுகம் செய்ய Uber நிறுவனம் திட்டமிடுகிறது.

பறக்கும் டாக்சிக்காக புதிய குட்டி விமானங்கள் தயாரிக்கப்பட்டுவருகின்றன என்றும் அவை  ஒருவகையில் ஹெலிகாப்டர் போன்று இயங்கினாலும், ஹெலிகாப்டர் போன்ற சப்தமின்றி, எளிதாக பறக்கவும், இறங்கவும் என்று நவீன தொழில் நுட்பத்துடன் இந்த டாக்சி வடிவமைக்கப்பட்டுவருகிறது.     


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now