நேற்று முன்தினம் சிட்னி Maroubra கடற்கரையிலிருந்து 23 வயதான Srishti Bhandari என்ற பெண்ணின் உடல் மீட்கப்பட்டிருந்த நிலையில் அந்தப் பகுதியிலிருந்து இன்று காலை ஆண் ஒருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.
Srishti Bhandari-வின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் விசாரணை நடத்திய காவல்துறையினர் அவர் கடந்த திங்கள் இரவு 26 வயதான Sudeep Uperty என்பவருடன் குறித்த கடற்கரையில் இருந்தார் எனக் கண்டறிந்ததையடுத்து Sudeep Uperty-ஐத் தேடும் பணி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் இன்று காலை Maroubra கடற்கரைக்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த உடல் யாருடையது என்பது இன்னமும் உறுதிசெய்யப்படாவிட்டாலும் அது Sudeep Uperty-ஆக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
கடற்கரையிலோ அல்லது கடலிலோ இருந்தபோது பாரிய கடல் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டதால் இவர்கள் மரணமடைந்திருக்கலாம் என கூறப்படுகின்றது.
இதேவேளை மரணமடைந்தவர்கள் நேபாளப் பின்னணி கொண்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
