சர்ச்சைக்குரிய சிட்னி Opal Tower அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள அனைவரையும் 24 மணி நேரத்தில் அங்கிருந்து வெளியேறுமாறு கட்டட மேற்பார்வை முகாமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அசாதரண சத்தம் குறித்த பூர்வாங்க சோதனைகளின் பிரகாரம் அங்குள்ள 51 குடியிருப்புக்களை சேர்ந்தவர்கள் மாத்திரமே இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்டிருந்தனர். ஆனால், அடுத்த பத்து நாட்களுக்கு இந்த அடுக்குமாடி குடியிருப்பு தொடர்பான முழுமையான சோதனையொன்றை மேற்கொள்வதற்கு இரண்டு கட்டட நிபுணர்கள் தலைமையிலான குழு நியமிக்கப்பட்டிருப்பதால் அங்குள்ளவர்கள் அனைவரையும் உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சிட்னி Olympic Park பகுதியில் சுமார் 165 மில்லியன் டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்ட பிரம்மாண்டமான இந்த Opal Tower அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 300 குடும்பங்கள் வசிக்கிறார்கள். இவர்கள் அனைவரும் தற்போது இடைத்தங்கலிடங்களில் தங்கவைப்பட்டுள்ளார்கள். கட்டத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பில் தொடர்ச்சியாக அசளகரியங்களுக்கு முகங்கொடுத்துவரும் குடியிருப்பு உரிமையாளர்களுக்கு நட்டஈடு வழங்கப்படும் என்று அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகம் அறிவித்துள்ளது. அத்துடன், கட்டத்தில் முழுமையான பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளது.
கட்டடத்தின் பாதுகாப்பு தொடர்பாக தீவிர முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு, பத்து நாட்களுக்கு பின்னர் மீளத்திறக்கப்பட்டவுடன் அனைத்து குடும்பங்களும் தங்களிடங்களுக்கு திரும்பலாம் என்று கட்டத்தின் முகாமையளர் உறுதியாக கூறியுள்ளார்.
சிட்னியின் பிரம்மாண்டமான அடுக்குமாடி குடியிருப்புக்களில் ஒன்றான இக்கட்டடத்தில் ஒரு படுக்கையறையுடன் கூடிய குடியிருப்பின் விலை 620000 என்பதுடன் இரண்டு படுக்கையறையுடன் கூடிய குடியிருப்பின் விலை 934000 என தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share
