சிட்னி ஒலிம்பிக் பார்க் பகுதியிலுள்ள Opal அடுக்குமாடித்தொடரில் வெடிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் முழுக்கட்டடமும் இடிந்துவிழும் ஆபத்துள்ளதாகவும் எழுந்துள்ள சர்ச்சையை அடுத்து குறிப்பிட்ட அடுக்குமாடித்தொடரை நிர்மாணித்த கட்டட நிறுவனம் மெல்பேர்னில் கட்டிய கட்டங்கள் தொடர்பாக விக்டோரிய கட்டட கண்காணிப்பு நிறுவனம் சோதனைகளில் இறங்கியுள்ளது.
மெல்பேர்ன் Docklands பகுதியில் பல லட்சக்கணக்கான டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடம் உட்பட இன்னும் சில கட்டடங்களில் இந்த சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நான்கு வாரங்களுக்கு மேற்கொள்ளப்படவுள்ள இந்த சோதனைகளில் கட்டுமானப்பணி குறித்த சகல படிமுறைகளும் நேர்த்தியாக விசாரிக்கப்பட்டு - அவற்றின் பாதுகாப்பு குறித்த அனைத்து விடயங்களும் உறுதிப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
