சிட்னி ரயில்களில் கடந்த செவ்வாய் முதல் கடனட்டைகளை பயன்படுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளநிலையில் இதனை பல லட்சக்கணக்கானோர் பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. .
ரயில்களில் பயணிப்பவர்கள் OPAL அட்டைகளைப்பெற்று அதில் பணம் செலுத்தி பயணங்களை மேற்கொள்ளவேண்டிய சிரமங்கள் நீங்கி, இனிமேல் கடனட்டைகளின் மூலம் நேரடியாகவே கட்டணங்களை செலுத்தி ரயில்களில் பயணங்களை மேற்கொள்ளக்கூடிய வசதி செய்யப்பட்டதாக நியூ சவுத் வேல்ஸ் மாநில போக்குவரத்து அமைச்சர் Andrew Constance தெரிவித்துள்ளார்.
சிட்னியில் குறுந்தூர பயணங்களை மேற்கொள்பவர்களுக்கும், நகரத்தை சுற்றிப்பார்ப்பதற்கு வேறு இடங்களிலிருந்து சிட்னி வருகின்ற உல்லாசப்பயணிகளுக்கும் இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக அமையும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த வருட ஆரம்பத்தில், Ferry பயணங்களில் கடனட்டைகளின் மூலம் கட்டணங்களை செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் தற்போது ரயில்களில் அது சாத்தியமாகியிருக்கிறது என்றும் கூறியுள்ள போக்குவரத்து அமைச்சர் Andrew Constance, அடுத்த வருட ஆரம்பத்தில், சிட்னி பேருந்துக்களிலும் இந்த கட்டணமுறை தெரிவு அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
Share