சிட்னி Lalor Park பகுதியில் நேற்றிரவு துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி 3 வயது சிறுமி மரணமடைந்திருந்தநிலையில் அச்சிறுமியின் தந்தை மீது அனுமதியில்லாமல் துப்பாக்கியை வைத்திருந்தமைக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்றிரவு அவசரசேவைப்பிரிவினர் சிறுமியின் வீட்டுக்கு அழைக்கப்பட்டபோது, கழுத்தில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்தநிலையில் சிறுமி உயிரிழந்திருந்தார்.
குறித்த சிறுமி துப்பாக்கியை எடுத்து தன்னைத்தான் சுட்டுக்கொண்டாரா அல்லது தந்தையால் சுடப்பட்டாரா என்பது குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் நடைபெற்றபோது சிறுமியின் தாயும் இன்னும் 3 பிள்ளைகளும் அங்கு இருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
இந்தநிலையில் அனுமதியின்றி துப்பாக்கியை வைத்திருந்தமைக்காகவும் குடும்ப வன்முறைச் சட்டம் ஒன்று தொடர்பிலான ஆணையை மீறிமைக்காகவும் 43 வயது நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
