சிட்னி தடுப்பு முகாமில் தனது அறையில் 16 மொபைல் போன் மற்றும் 17 மொபைல் சிம் அட்டைகள் சகிதம் பெரும் மோசடியில் ஈடுபட்ட 43 வயது நைஜீரிய நாட்டைச் சார்ந்த ஒருவரை போலீசார் இன்று கைது செய்தனர்.
மொபைல் மற்றும் ஈமெயில் மூலம் பிறருக்கு காதல் வலை வீசும் கள்ளத்தனம், பிறரின் அடையாளங்கள் கொண்ட தகவலை திருடி நிதி மோசடி செய்தல், நிறுவனங்களின் மின்னஞ்சல்களை திருடுதல் என்று பல வழிகளில் ஒரு மோசடிக் கும்பல் ஈடுபட்டது என்றும், இவர்களின் தலைவராக சிட்னி தடுப்பு முகாமில் இருந்த இந்த 43 வயது நைஜீரிய நாட்டைச் சார்ந்தவர் செயல்பட்டார் என்றும் போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த மோசடி தொடர்பாக 36 வயது பெண், 20 வயது ஆண் உட்பட மேலும் மூன்றுபேர் கைது செய்யப்பட்டனர். மோசடி மூலம் இவர்கள் சேகரித்த சுமார் மூன்று மில்லியன் டாலர் பணத்தை இவர்கள் நைஜீரியாவுக்கு அனுப்பிவைத்தனர் என்றும், இந்த பணத்தை மீட்பது கடினம் என்றும் போலீசார் கூறுகின்றனர்.
