SKIP TO MAIN CONTENT

சிட்னி விலவூட் தடுப்பு முகாமில் புகலிடக்கோரிக்கையாளர் மரணம்!

Villawood Immigration Detention Centre. A man has attempted self harm at the facility.
Villawood Immigration Detention Centre is one of three facilities used to house people who have had their visas cancelled. Source: SBS News

1 min read

Published

Updated

By Renuka


Skip to article content

சிட்னி விலவூட் அகதிகள் தடுப்பு முகாமில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஏற்கனவே விலவூட் தடுப்புமுகாமில் வாழ்ந்த Sierra Leone-ஐ சேர்ந்த 33 வயது நபர் ஒருவர் ஜனவரி இறுதியில் உயிரிழந்திருந்த பின்னணியில் கடந்த 6 வாரங்களுக்குள் அங்கு இடம்பெற்றுள்ள இரண்டாவது மரணம் இதுவாகும்.

ஈராக் பின்னணி கொண்ட புகலிடக்கோரிக்கையாளர் ஒருவரே நேற்றையதினம் மாலை 6 மணியளவில் சடலமாக தனது அறையிலிருந்து மீட்கப்பட்டதாக அகதிகள் செயற்பாட்டாளர் Ian Rintoul தெரிவித்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் மேலதிக விபரங்கள் எதையும் வெளியிடாத பொலிஸார் குறித்த நபரின் சடலம் மரணவிசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த மரணம் தொடர்பாக குறிப்பிட்ட நபரது குடும்பத்தினருக்கு தமது அனுதாபங்களையும் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் விலவூட் தடுப்பு முகாமில் தொடர்ச்சியாக மரணங்கள் இடம்பெற்றுவருவதைச் சுட்டிக்காட்டியுள்ள அகதிகள் செயற்பாட்டாளர் Ian Rintoul குறித்த மணங்கள் தொடர்பிலும் தடுப்பு முகாம் தொடர்பிலும் சுயாதீன விசாரணை உடனடியாக நடத்தப்படவேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

Lifeline 13 11 14

beyondblue 1300 22 4636


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now