சிட்னி விமானநிலையத்தில் Qantas விமான சேவை உத்தியோகத்தர் ஒருவர் தன்னுடன் நிறவெறியுடையவராக நடந்துகொண்டார் என்று தென்னிந்திய திரைநட்சத்திரம் ஷில்பா ஷெட்டி தனது சமூக வலைத்தளத்தில் (Instagram) பதிவிட்டதை அடுத்து அவரிடம் Qantas விமானசேவை மன்னிப்புக்கோரியுள்ளது.
சிட்னியிலிருந்து மெல்பேர்னுக்கு புறப்படவிருந்த சமயம் சிட்னி விமானநிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் இந்த சம்பவத்தினால் தான் மிகுந்த அசௌகரியத்துக்கு உள்ளானதாகவும் ஷில்பா ஷெட்டி குறிப்பிட்டதை அடுத்து அவரிடம் Qantas விமானசேவை மன்னிப்பு கேட்டிருக்கிறது.
சம்பவம் இடம்பெற்ற அன்று விமானத்தில் ஏறுவதற்கான பொதிகளை சோதனை செய்த Qantas விமானசேவை பெண் தான் கையில் கொண்டு செல்வதற்காக வைத்திருந்த பொதியை (hand luggage) விமானத்திற்குள் கொண்டுபோக முடியாது என்று மறுத்துவிட்டார் என்றும் அந்தப்பொதி மிகவும் பெரியது என்றுகூறி இன்னொரு இடத்துக்குச்சென்று அந்தப்பொதியை விமானத்திற்குள் கொண்டுசெல்வதற்கான நடைமுறையை பின்பற்றுமாறு பணித்தார் என்றும் ஷில்பா ஷெட்டி கூறியுள்ளார்.
இதிலுள்ள பிரச்சினை என்ன என்று அவர் விளக்கும்போது - தான்கொண்டு சென்ற பொதி விமானத்துக்குள் கையில் கொண்டுசெல்வதற்கு தடை விதிக்குமளவுக்கு பெரியது அல்ல என்றும் அதனை அந்த உத்தியோகத்தரிடம் கூறியபோதும் அதனை ஏற்றுக்கொள்வதற்கோ அந்தப்பொதியை வாங்கி பார்ப்பதற்குக்கூட அவர் மறுத்துவிட்டார் என்றும் ஆனால் மற்றைய உத்தியோத்தரிடம் சென்று அந்தப் பொதியை சோதனை செய்தபோது அந்த உத்தியோகத்தர் தனது பொதி பெரியது அல்ல என்று ஏற்றுக்கொண்டார் என்றும் ஷில்பா கூறியிருக்கிறார்.
தன்னுடன் இரண்டாவதாக பேசிய உத்தியோகத்தர் தன்மையானவர் என்றும் ஆனால் முதலில் பேசிய பெண்மணி தன்னுடைய நிறத்தின் அடிப்படையில் விருப்பம் கொள்ளாததால் உதவி செய்யவில்லை என்றும் ஷில்பா மிகவும் சீற்றத்துடன் தனது சமூக வலைத்தள பதிவை எழுதியிருதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
