SKIP TO MAIN CONTENT

சிட்னி வந்த இந்திய சோதிடர் பாலியல் குற்றச்சாட்டில் கைது!

handcuffed
Source: Wikipedia

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

இலவசமாக சோதிடம் சொல்வதற்கு வருமாறு கூறி சிறுமி ஒருவர் மீது பாலியல் தாக்குதல் நடத்தினார் என்று கூறப்படும் இந்திய சோதிடரை சிட்னி பொலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்தியாவிலிருந்து சோதிடம் பார்ப்பதற்காக சிட்னிக்கு வந்திருந்த 31 வயதான இந்தச்சோதிடர் 14 வயது சிறுமியை தான் தங்கியிருந்த இடத்திற்கு இலவசமாக சோதிடம் பார்க்க வருமாறு அழைத்திருந்ததாகவும், சோதிடம் சொல்வதற்கென Liverpool-இல் அமைக்கப்பட்ட அலுவலகத்திற்கு தனியாக சென்ற சிறுமி மீது அவர் பாலியல் ரீதியாக தாக்குதல் நடத்தியுள்ளார் என்றும் நேற்று 21 ஆம் திகதி மாலை பொலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது.

உடனடியாக குறிப்பிட்ட சோதிடரை தேடிச்சென்றபோது அவர் சிங்கப்பூர் செல்வதற்காக சிட்னி விமானநிலையத்திற்கு சென்றிருந்தநிலையில் அவரை விமானநிலையத்தில் வைத்து கைது செய்த பொலீஸார் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிணை மறுக்கப்பட்ட நிலையில் தடுப்புக்காவலில் வைக்கப்படடுள்ள இவருக்கு எதிராக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளபட்ட பின்னர் நீதிமன்றில் முன்னிலையாக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now