சிட்னி துறைமுகப் பகுதியிலுள்ள வீடொன்று சுமார் 100 மில்லியன் டொலர்களுக்கு விற்பனையாகி சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Point Piper-இல் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள Fairwater என அழைக்கப்படும் இரண்டு மாடிகளுடனான தோட்டவீடு Sir James Oswald Fairfax குடும்பத்திற்குச் சொந்தமானதாகும்.
1901ம் ஆண்டு £5350-க்கு கொள்வனவு செய்யப்பட்ட இவ்வீட்டின் தற்போதைய பெறுமதி 100 மில்லியன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த வீடு 100 மில்லியன்களுக்கு விற்கப்படும் பட்சத்தில் ஆஸ்திரேலியாவில் முதன்முதலாக அதிகூடிய விலைக்கு விற்கப்பட்ட தனிச் சொத்து என்ற சாதனை படைக்கப்படும்.
இதற்கு முன்பாக Fairwater-க்கு அருகிலுள்ள Elaine என்ற இடம் கடந்த ஆண்டு சுமார் 71 மில்லியன் டொலர்களுக்கு விற்கப்பட்டமையே இதுவரை சாதனையாக கருதப்படுகின்றது.
Fairwater வீடு 100 மில்லியன் டொலர்களுக்கு விற்கப்படும் போது Stamp duty-ஆக 6.9 மில்லியன் டொலர்கள் நியூ சவுத்வேல்ஸ் மாநில அரசுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
