SKIP TO MAIN CONTENT

சிட்னியில் 94 வயது மூதாட்டியிடம் சில்மிஷம் செய்த குற்றச்சாட்டில் 102 வயது நபர் கைது!

An elderly man.
It essential that private rental housing meets the need that every person has for a secure and affordable home. Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

சிட்னியிலுள்ள முதியோர் இல்லமொன்றில் 102 வயது வயோதிபர் ஒருவர் அங்கிருந்த 94 வயதுடைய மூதாட்டியுடன் தகாத முறையில் நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிட்னி Waverley பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லமொன்றில் கடந்த 23 ஆம் திகதி மதியம் இடம்பெற்றதாக கூறப்படும் இந்த சம்பவம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து முதியோர் இல்லத்துக்கு சென்ற பொலிஸார் குறிப்பிட்ட நபரை கைது செய்து பொலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

மூதாட்டியுடன் தகாத முறையில் நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டுப்பதிவு செய்யப்பட்டு நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்ட குறிப்பிட்ட வயோதிபரை எதிர்வரும் நவம்பர் 20 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பொலிஸார்உ த்தரவிட்டுள்ளனர்.

ஆஸ்திரேலிய வரலாற்றில் அதி கூடிய வயதில் கைது செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நபர் இவர் என்று நம்பப்படுவதாக ஊடகமொன்று தெரிவித்துள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now