சிட்னியில் நேற்றைய தினம் மாலை பெய்த hail-ஆலங்கட்டி அல்லது பனிக்கட்டி மழையினால் வாகனங்களுக்கு பல லட்சக்கணக்கான டொலர்கள் சேதம் ஏற்பட்டுள்ளதாக காப்புறுதி நிறுவனங்கள் தமக்கு மேற்கொள்ளப்பட்ட அவசர அழைப்புக்களை மேற்கோள்காண்பித்து தகவல் வெளியிட்டுள்ளன.
நேற்று மாலை 6.30 மணிவரை மேற்கொள்ளப்பட்ட அழைப்புக்களின் வழியாக சுமார் 20 மில்லியன்கள்வரை வாகன சேதங்களுக்கான காப்புறுதியைக்கோரும் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய காப்புறுதி கவுன்ஸில் தெரிவித்துள்ளது.
சிட்னியில் நேற்று மாலை ஏற்பட்ட அடைமழை, பெருங்காற்று மற்றும் ஆலங்கட்டி மழையினால் பலத்த சேதங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவசர உதவி சேவைகளுக்கும் நூற்றுக்கணக்கான அழைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
1999 ஆம் ஆண்டு ஆண்டுக்கு பின்னர் ஆலங்கட்டி மழையினால் மிகப்பெரியளவு சேதங்கள் ஏற்பட்டது இந்த தடவைதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
