NSW மாநிலத்தின் சிட்னி பெருநகரின் பென்ரித் எனுமிடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இரட்டைக் குழந்தைகளுடன் கர்ப்பிணியாக இருந்த 23 வயது Katherine Hoang மற்றும் வாகனத்தை ஓட்டிசென்ற 17வயது Anh Hoang என்று இருவரும் உயிர் இழந்தனர். இரட்டைக் குழந்தைகளும் தாயுடன் பலியானார்கள். மேலும் Katherine அவர்களின் கணவர் Bronko Hoang கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் பயணம் செய்த வாகனத்தின் மீது மோதிய வாகனத்தை ஓட்டிவந்த ஓட்டுனர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் 29 வயது Richard Moananu என்பவர் என்றும் அவர் வாகனம் ஓட்டும் லைசென்ஸ் இல்லாதவர் என்றும், சாலையில் வாகனம் செல்லக்கூடாத பகுதியில் வாகனத்தை ஓட்டிவந்து மோதினார் என்றும் போலீசார் கூறுகின்றனர். மேலும் அவர் குறிப்பிட்ட வேகத்தைவிட 45 கிலோமீட்டர் அதிகமான வேகத்தில் வாகனத்தை ஓட்டிவந்து இந்த விபத்துக்கு காரணமானார் என்று 10 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
