SKIP TO MAIN CONTENT

சிட்னியில் காணாமல்போன தமிழ் இளைஞரைத் தேடும்பணி தொடர்கிறது!

SES Wollongong City Unit
Source: SES Wollongong City Unit

1 min read

Published

Updated

By Renuka


Skip to article content

கடந்தவாரம் காணாமல்போன சிட்னி வாழ் தமிழரான சக்திவேல் லோகநாதன்(28) என்பவரைத் தேடும் பணி தொடர்ந்தும் நடைபெறுகின்றது.

தரை, மற்றும் வான் வழியாக மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கைகள் எதுவும் இதுவரை பலனளிக்கவில்லை எனவும் இவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் தம்மைத் தொடர்புகொள்ளுமாறும் நியூசவுத் வேல்ஸ் காவல்துறை அறிவித்துள்ளது.

சக்திவேல் லோகநாதன் கடைசியாக ஞாயிற்றுக்கிழமை (15.09.2019) பிற்பகல் 3 மணியளவில் Wollongong-க்கு அருகிலுள்ள Scarborough ரயில் நிலையத்தில் காணப்பட்டதாகவும், அதன் பின்னர் அவரிடமிருந்து எவ்வித தகவல்களும் இல்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த இடத்திலுள்ள CCTV-யில் grey jacket, கருநீல tracksuit pants மற்றும் கருநீல ரீ-ஷேர்ட்டுடன் அவரது தோற்றம் பதிவாகியுள்ளது.

Strathfield பகுதியில் வாழ்ந்துவந்த இந்தியப்பின்னணி கொண்ட சக்திவேல் லோகநாதன் IT துறையில் பணிபுரிபவர் என்றும் Wollongong பகுதிக்கு அவர் ஏன் சென்றார் என்பது தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமைக்குப் பின்னர் அவர் தனது வங்கிக்கணக்கைப் பயன்படுத்தவில்லை என்றும் எவ்வித தொடர்பாடல்களையும் மேற்கொண்டிருக்கவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.

நேற்றையதினம் Scarborough பகுதிக்கு அருகிலுள்ள Sea Cliff Bridge-இல் அவசரசேவைப்பிரிவினரும் காவல்துறையினரும் இணைந்து சுமார் 6 மணிநேரங்களுக்கு மேலாக தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டபோதிலும் பலன் எதுவும் கிட்டாதநிலையில் தேடுதல்வேட்டை தொடர்கிறது.

இவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் Crimestoppers-ஐ 1800 333 000 என்ற இலக்கத்திலோ அல்லது https://nsw.crimestoppers.com.au/ என்ற இணையத்தளத்திலோ தொடர்புகொள்ளுமாறு நியூசவுத் வேல்ஸ் காவல்துறை கோரியுள்ளது.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now