சிட்னியில் இரண்டு இந்திய உணவகங்களை நடத்திவரும் நிர்வாகம் தனது சமையல் கலைஞர்களுக்கு சரியான ஊதியம் வழங்காத வழக்கு நீதிமன்றுக்கு கொண்டுசெல்லப்பட்டதன் விளைவாக வழக்கு விசாரணைகள் முடிவடையும்வரையில் குறிப்பிட்ட உணவகங்களின் சொத்துக்களை முடக்கிவைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிட்னியின் Nowra மற்றும் Wollongong ஆகிய இடங்களிலுள்ள இரண்டு உணவகங்கள் இந்த சிக்கிலில் மாட்டியுள்ளன.
குறிப்பிட்ட உணவகங்களில் பணிபுரியும் சமையல் கலைஞர் ஒருவர் தனக்கு தரப்படவேண்டிய சம்பள நிலுவையை குறிப்பிட்ட உணவக நிர்வாகம் தரவில்லை என்று முறைப்பாடு செய்ததையடுத்து, இந்த விவகாரம் நீதிமன்றம் கொண்டுசெல்லப்பட்டது.
வழக்கு தொடுத்திருக்கும் சமையல் கலைஞரைவிட அந்த உணவகத்தில் பணிபுரியும் இன்னொரு தொழிலாளரும் தனக்கு சுமார் 230,000 டொலர் சம்பளநிலுவையிருப்பதாகக்கூறி வழக்கில் இணைந்துகொண்டுள்ளதையடுத்து குறிப்பிட்ட உணவகங்களின் சொத்துக்களை முடக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட அரை மில்லியன் டொலர்கள் வரையிலான சம்பள நிலுவையை செலுத்தாமல் தன்னிடம் பணிபுரிந்தவர்களை அடிமைபோல நடத்திவந்த குறிப்பிட்ட உணவகம் இந்த வழக்கில் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுக்கவேண்டிய இக்கட்டில் மாட்டியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையாகியுள்ள சட்ட நிறுவனம் கூறியுள்ளது.
வழக்கு எதிர்வரும் மே மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
