சிட்னியில் கடந்தவாரம் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞர் இலங்கை அமைச்சர் பைசர் முஸ்தபாவின் நெருங்கிய உறவினர் என ஏபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் Malcolm Turnbull முன்னாள் வெளிவிவகார அமைச்சர் Julie Bishop உள்ளிட்டோரை கொலை செய்ய திட்டம் தீட்டியதுடன் பல முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 25 வயது முகமட் நிஜாம்டீன், இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவின் மருமகன் எனவும், இலங்கை வங்கியின் முன்னாள் தலைவர் ஜெஹான் காசிம் என்பவரின் பேரன் எனவும் ஏபிசி தெரிவித்துள்ளது.
IS அமைப்புடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நிஜாம்டீனின் விசா இந்த மாதத்துடன் முடிவடைவதால் அவரை இங்கு வைத்தே விசாரணை செய்வதற்காக குற்றவியல் நீதி விசாவிற்கு பொலிஸார் விண்ணப்பித்துள்ள பின்னணியில், நிஜாம்டீன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவர் 15 வருட சிறைத்தண்டனையை எதிர்கொள்ளவேண்டிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
