சிட்னியில் தன்னை பொலிஸ் அதிகாரி என்று பொய் கூறி உணவகமொன்றில் குறைந்த விலையில் உணவுப்பொருட்களை கொள்முதல் செய்வதற்கு முயற்சி செய்த நபரை பொலீஸார் கைது செய்துள்ளனர்.
குறிப்பிட்ட நபர் குற்றத்திருத்த பிரிவில் (Corrective Services) பணிபுரிபவர் என்று பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
உணவகம் ஒன்றுக்கு சென்று, தற்சமயம் தான் பணியில் இல்லாத (Off duty) பொலீஸ் உத்தியோகத்தர் என்று கூறி குறைந்த விலையில் உணவு தரும்படி கோரிக்கை விடுத்தபோது குறிப்பிட்ட உணவகத்தினர் உடனடியாக பொலீஸாருக்கு அறிவித்துள்ளனர்.
உணவகத்துக்கு விரைந்து வந்த பொலீஸார் 43 வயதான குறிப்பிட்ட நபரை கைது செய்து குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனர்.
உடனடியாக பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள இந்த உத்தியோகத்தர், கடுமையான பிணை முன்நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
