SKIP TO MAIN CONTENT

கேக் உண்ணும் போட்டியில் ஆஸ்திரேலிய மூதாட்டி மரணம்!

lamington cake
lamington cake Source: Getty Images

1 min read

Published

Updated


Skip to article content

ஆஸ்திரேலிய தினத்தையொட்டி முதியவர்களுக்கு நடத்தப்பட்ட கேக் உண்ணும் போட்டியில் கலந்துகொண்ட மூதாட்டி ஒருவர் கேக்கை அப்படியே அள்ளி வாய்க்குள் திணித்து சாப்பிட எத்தனித்தபோது வலிப்பு வந்து இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

குயின்ஸ்லாந்தின்  Hervey Bay பகுதியில் ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 60 வயது மூதாட்டியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற உடனேயே ஹோட்டல் உத்தியோகத்தர்கள் ஓடிச்சென்று மூதாட்டிக்கு சுவாசமளித்து அவரை காப்பாற்றுவதற்கு முயற்சிசெய்தபோதும் அது பலனளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூதாட்டியின் மரணத்துக்கு ஹோட்டல் நிர்வாகம் தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now