SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவில் ஒட்டகப் பால் குடிப்போர் அதிகரிப்பு!

ஒரு நாளைக்கு ஒரு Glass ஒட்டகப் பால் குடித்தால் அது இரத்தத்திலுள்ள சர்க்கரையின்(blood-sugar) அளவை ஆரோக்கியமானதாகப் பராமரிக்க உதவுகிறது.

Capture.JPG
Camels milking on the farm at Kyabram, Victoria Source: SBS / Prabaharan Maheswaran

1 min read

Published

Updated

By Maheswaran Prabaharan

Source: SBS


Skip to article content

பல கலாச்சாரங்களில் பல்லாண்டுகளாக ஒட்டகப் பால் ஒரு முக்கியப் உணவுப்பொருளாக இருந்தாலும், ஆஸ்திரேலியாவில் இது மிகவும் குறைவாகவே உட்கொள்ளப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது ஆஸ்திரேலியாவில் ஒட்டகப்பாலின் நுகர்வு அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு அதிதீத பயனளிக்கும் ஒரு பானம் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. ஒரு நாளைக்கு ஒரு குவளை(Glass) ஒட்டகப் பால் குடித்தால் அது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது என்றும் இரத்தத்திலுள்ள சர்க்கரையின்(blood-sugar) அளவை பராமரிக்க உதவுவதாகவும் ஒரு புதிய மெல்பன் ஆய்வு தெரிவித்துள்ளது.

நாட்டின் உள்ளூர் சந்தை மற்றும் ஏற்றுமதி ஆகிய இரண்டிற்கும் ஒட்டகப்பாலுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதாக Kyabram எனும் இடத்தில அமைந்துள்ள Camel Milk Co Australia அமைப்பு உறுதிப்படுத்துகிறது. இந்த அமைப்பின் பண்ணையில் ஒட்டகங்களின் எண்ணிக்கை விரைவில் 700 ஐத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வருட வசந்த காலத்திற்கு முன்னர் சுமார் 200 ஒட்டகக் கன்றுகள் அங்கு பிறக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Camel milk is low in fat and lactose and is a great alternative to those who have issues with dairy. It contains Lactoferrin and is a good source of protein, calcium, magnesium and potassium.

ஒட்டகப் பாலில் கொழுப்பு மற்றும் லாக்டோஸ் குறைவாக உள்ளது. அத்துடன் சாதாரண பாற்பொருட்களினால் ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த மாற்றீடாகும். ஒட்டகப்பாலில் லாக்டோஃபெரின்(Lactoferrin) உள்ளது. அத்துடன் புரதம், கல்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் ஒட்டகப்பாலில் செறிந்து காணப்படுகிறது.

_________________________________________________________________

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 

பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில்

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now